அமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு!!
1,770 total views
வழக்கமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை பின் தொடர்கிறது என செய்திகள் வரும். இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி என FBI ( Federal Bureau of Investigation) சொல்லியுள்ளது. அதுவும் சீனா அரசே செய்ததாக சொல்கிறது.
நிறுவனங்களின் வணிக விவரங்களையும் தொழில்நுட்பகங்களையும் தெரிந்து கொள்ளவே இந்த தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த தாக்குதலில் நிறுவனங்கள் பாதிக்க பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக FBIயின் செய்தி தொடர்பு அதிகாரி, செய்தியாளர்களிடம் “சமீப நாட்களாக சீன அரசு அதிகாரிகள் அமெரிக்காவின் வணிக மற்றும் அரசு நிறுவனக்களின் இணையதளங்களில் ஊடுருவி தகவல்களை திரட்டுவதாக சொல்லி இருக்கிறார்”. இதனை FBI சில இடங்களில் கண்டுப் பிடித்திருப்பதாகவும், அவர்கள் சொல்கிறார்கள். அதே போல சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இதனை உணர்ந்திருக்கிறது.
இதனை சீனத் தூதர் முழுமையாக மறுத்திருக்கிறார். அவர் இது போன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும் என கூறியிருக்கிறார். அவர் கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகளின் முடிவு என்ன ஆனது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதாரமற்ற உண்மையன நிருபிக்கமுடியாத அவதூறு இது என்றார்.
எட்வர்ட் ஸ்னோடன், அசாஞ்சே போன்றவர்கள் கொடுத்த அடியில் இருந்து இந்த அரசுகள் இன்னும் மீள வில்லை. ஆனால் ஒவ்வோரு அரசும் மற்ற நாடுகளை உளவு பார்த்துக் கொண்டே தன்னை பாதுகாக்க முயல்கிறது. இன்று உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீனா தன்னை அமெரிக்காவிடம் இருந்து பாதுகாத்து கொள்ள சொந்த இயக்குதளம் தயாரிப்பதை நாம் ஏற்கணவே பார்த்தோம்.
Comments are closed.