உங்களுக்கு சோலார் தேவையா?

5,447

 5,494 total views

உங்களுக்கு என் மேல் கோவம் இருக்கலாம்.. என்னடா இந்த கார்த்திக் பய TECHதமிழ்ல தினமும் எழுதாம இருக்கானே. அந்த PHP புத்தகமும் எழுதல. பணம் சம்பாதிக்கும் வழிகள் சொல்ற DVDயும் முடிக்கலனு.

  1. PHP தமிழ் புத்தகம்: 8 out of 32 பகுதிகள் முடிந்துவிட்டது. இன்னும் எழுதணும்.
  2. பணம் சம்பாதிக்கும் DVD:  பிப்ரவரி மாதம் கண்டிப்பாக விற்பனைக்கு வருகிறது.

இப்போ.., கடந்த ஒரு வருட தேடல்கள் மற்றும் தொழில்நுட்ப புரிதல் பயனாக எனது நண்பர்களுடன் இணைந்து Blaze Power Blog எனும் சூரிய மின் சக்தி நிறுவனத்தை மதுரையில்  தொடங்கியுள்ளேன்.  நாங்க கடை போட்டு சோலார் பேணல சரக்கு மாதிரி விக்கல.  உங்களோட வீடு, கடை, அலுவலகத்துல  பகல் நேரத்துல அதிகமான மின் சாதனங்கல பயன்படுத்துனா  சோலார் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

சோலார் ரெண்டு விதமா போடலாம்.

1. பகல்ல EB ய நாமலே நிறுத்தி வைச்சுட்டு முழுக்க முழுக்க சோலார் பயன்படுத்தலாம்.
2. உங்ககிட்ட ஏற்கனவே Inverter , Battery இருந்தா அத சோலார் வைச்சு Charge மட்டும் ஏற்றுவது.

பொதுவாக எழும் சந்தேகங்கள்:

1.  மேகமூட்டமா இருந்தா சோலார் இயங்குமா?
கண்டிப்பாக 60%  மின் சக்தி மேக மூட்டமா இருந்தாலும் உற்பத்தி ஆகும்.

2. அரசு மானியம் எவ்ளோ கிடைக்கும்?

குறைந்தது 30% கிடைக்கும் அதற்கு நீங்கள் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

3. நீங்க அந்த மானியத்த கழிச்சுகிட்டு விலைய குறைப்பீங்களா?

உங்ககிட்ட முதல்ல ஒரு லெட்சத்தி அறுவதாயிரம் னு சொல்லிட்டு, மானியம் போக 1,30,000 தாங்க னு சொலுரததுக்கு பதிலா… நாங்க.. 1,24,500 ஆகும்… அதுக்கு அப்றோம் உங்களுக்கு 30% மானியம் ஆறு மாசத்துக்கு அப்றோம் கிடைக்கும்னு சொல்வோம்.

வெறுமனே யான விலை சொல்லி அப்றோம் ஏமாத்த எனக்குத் தெரியாது.

4. Su-Kam  கம்பெனி 1KW  வெறும் 1,10,000 னு சொல்றாங்களே?

இருக்கலாம். பயன்படுத்தும் பாகங்கள், நிறுவும் முறைகளில் பல்வேறு தரங்கள் உள்ளன. எங்களின் விலை இதை விட 14000 அதிகம்.. ஆனால் அரசு மானியம் உங்களுக்கு கிடைக்கும். Su-Kam சொல்லும் விலை அரசு மானியம் கழித்து உங்களுக்கு கொடுக்கப்படும் இறுதி விலை.

5. பேணல் மட்டும் தனியா குடுப்பீங்களா?

கொடுப்போம்..

6. எந்த கம்பெனில இருந்து பேணல் வங்குறீங்க?

MNRE  அங்கீகரித்த ஒரு தயாரிப்பு தொழிற்சாலைல இருந்து நேரடியா வாங்குரோம்.

7. Warranty லாம் எப்டி?

முதல் பத்து வருசத்துக்கு 90% திறன். அடுத்த அஞ்சு வருசத்துக்கு 80% திறன் கண்டிப்பாக இருக்கும்.

9. மதுரனா.. எங்க ஊருக்கு வந்து Install பண்ண மாட்டீங்களா?

தற்போது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நீங்க எங்க இருந்தாலும் வந்து Install பண்ணுவோம். தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து செலவு இலவசம்.

 

விலை நிலவரம் தெரிய இந்த பக்கத்தை பார்க்கவும்:  http://blazepower.com/solar-power-plant.php

தங்களின் கேள்விகளை இந்த மின்னஞ்சளுக்கு அனுப்பவும்:  [email protected]

 

 

 

 

 

You might also like

Comments are closed.