130 total views, 2 views today
இதுவரை ரேஸ்களை மனிதர்களின் மத்தியில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரத்தில் உலகின் முதல்முதலாக ஓட்டுநரில்லா ரேஸ்களை துவக்கி வைத்துள்ளனர். இதனால் ரோபோக்களிடையே ஒரு சுமுகமான போட்டியையும் மற்றும் பார்க்கும் ரசிகர்களுக்கிடையே ஒரு உற்சாகத்தையும் தரும். இந்த அறிவிப்பை E – எலக்ட்ரிக் ரேசிங் சீரிஸ் குழுவினர் அறிவித்துள்ளனர்.
பல மக்களின் தானியங்கு காரைப் பற்றிய, அச்சத்தை போக்கும் விதமாக இந்த ரேஸ் அமைய உள்ளது. ஆகையால் பயனர்கள் அவர்களின் வேலையான வாகனம் ஓட்டுதலை மறந்துவிட்டு செயல்படும் நம்பிக்கை தன்மையை இது கொடுக்கவல்லது. மேலும் ரோபோ ரேசில் மக்கள் பணத்தை முதலீடு செய்வதால் அவர்களுக்கு தானியங்கு காரின் மீதான ஒரு இனம் புரியா ஈர்ப்பு ஏற்படவும் கூடவே அவர்கள் தானியங்கு காரின் தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது.சோதனை ஓட்டம் செய்து மக்களுக்கு உலகின் ஒரு புதிய சூழலைத் தரவுள்ள தானியங்கு கார்களைப் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தவும், மக்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் பெற இது நல்ல ஒரு மேடையாக அமையும்.

இது கார் தயாரிப்பாளர்களிடையே ஒரு முன்னேற்றத்தினை கொண்டு வருவது மட்டுமல்ல மக்களிடையே தானியங்கு காரினைப் பற்றிய விழிப்புணர்வையும் கூடுதல் ஆர்வத்தையும் தூண்டும் ஒரு விளம்பரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் 2020 க்குள் சாலைகளில் உலவ விட தயாராகி கொண்டு வரும் ஓட்டுனரின் உதவி இல்லாமல் இயங்கக் கூடிய கார்கலை கூடுதல் நம்பிக்கையுடன் வெளியிடலாம்.
Comments are closed.