தானியங்கு வாகனத் தயாரிப்பில் இணைந்த சாம்சங்:

450

 590 total views

தானியங்கு காரை பற்றிய திட்டத்தினை  பொருத்தவரையில்  பல நிறுவனங்கள்  அதனை 2020-க்குள்  சாலையில் உலவ விடும் நம்பிக்கையில்  பல சோதனை  முயற்சிகளை மேற்கொண்டும் பல முன்னணி கார் உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்தும்  வருகின்றன. உதாரணமாக கூகுளை எடுத்துக் கொண்டால்  அவை கடந்த ஆறு வருடங்களாகவே தானியங்கு காரை  சந்தைக்கு  கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்டு வருகின்றனர்.மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்  தானியங்கு காரினை எவ்வாறு ஐபோன்களை   கொண்டே இயக்குவது போன்ற எண்ணத்தில் செயலாற்றி வருகின்றனர்.மேலும் சீனாவின் இணைய தேடல் நிறுவனமான பைடுவும்  தானியங்கு கார் திட்டத்தில் இனைந்துள்ளதையும் மேலும் மூன்றே வருடங்களில் சாலையில் தானியங்கு கார்களை உலவ விட போவதாகவும்  அறிவித்திருந்தனர்.

home-where
ஆனால் சாம்சங் இந்த திட்டத்தினை  பற்றிய எந்த அறிவிப்பையும்  இதுவரை  வெளியிடாமல் இருந்தனர்.1990களிலேயே சாம்சங்கின் தலைவராக லீ குன் ஹீ அவர்கள் இருந்தபோது   தானியங்கு பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.ஆனால் 1997 ல் ஏற்பட்ட சில ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக அந்த திட்டம் திவாலாகி போனது. அதன் பின் தற்போது சாம்சங்கும்  தானியங்கு காரினை இயக்குவதனைப் பற்றிய திட்டத்தில் சேர்ந்துளள  அறிவிப்பை  புதன் கிழமையன்று வெளியிட்டது. இதற்காக சாம்சங் ஒரு குழுவினை நிறுவி  செயலாற்ற உள்ளது.நாளுக்கு நாள்  தானியங்கு கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின்  எண்ணிக்கை அதிகமாவதைப் பார்ப்பின் 2020க்குள் சாலையில் பல தானியங்கு கார்களை காணும்  சாத்தியமுண்டு.ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடையே இது போன்ற நுட்பங்கள் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறியே . இருப்பினும் சரியான சாலைப்  போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலைகளுக்கு உகந்ததாக அமையலாம்.

You might also like

Comments are closed.