நிசானின் தானியங்கு கார் :

666

 984 total views

நிசான் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் 30kwh மின்கலன் சேமிப்பில் 107 மைல்களை கடக்கூடிய தானியங்கு காரை  தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஆர்வமாக  உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் யாதெனில் நெருங்கிய போக்குவரத்திலும் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லும் ஒரு அம்சம்தான். இது மிகவும் நுணுக்கம்  நிறைந்த தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சரியான நில எல்லை வரைபாட்டுக்குள் ஓட்டிச் செல்லும் ஒரு நுட்பத்தையும் மேலும் சரியான பாதையை அமைத்து ஓட்டிச் செல்லும் அம்சத்தையும் கொண்டது. கூடவே உணவகங்களை பரிந்துரைக்கும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

இதில் ஓட்டுனருக்கு ஒரு மாத்திரையை (டேப்லட்டை) வழங்கி அதன் ஸ்டீயரிங் திருப்பங்களை தருகிறது . அதே சமயம் இருக்கைகள் அனைத்தும் வளைந்த மற்றும் உள்வாங்கிய நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் பாதுகாப்பானதே….!மேலும் உங்கள் சக பயணியுடன் போட்டியிடாமல் சுமூகமான பயணம் செய்யலாம் .நிசானின் இந்த காரை பூஜ்ஜிய விபத்துகளையும் பூஜ்ஜிய ஆபத்துகளையும் சந்திப்பதையே குறிக்கோள் என நிசானின் தலைமை செயல் அதிகாரி திரு.கரோலஸ் கோசன் தெரிவித்துள்ளார்.இந்த கார் மிகவும் ஆடம்பரமான மாபெரும் அழகிய தோற்றத்துடனும் வர உள்ளது . இந்நிறுவனம் இந்த காரை 2020இல் அறிமுகபடுத்த உள்ளது.

முக்கியமாக தானியங்கு காரை சாலைகளில் இயக்க சாலைகளில் கண்டிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாடுகள் சிலவற்றை செய்ய முதலீடுகள் செய்ய நேரிடும் . சரியான போக்குவரத்து குறியீடுகள் அனைத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே தானியங்கு காரை சரியான முறையில் சாலையில் இயங்க விட முடியும் .

 

தானியங்கு கார்களை வெளியிடுவதில் ஆப்பிள் , நிசான் , கூகுள் , ஆடி போன்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தும்  மிகவும் மும்முரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கூகுளின்  தானியங்கு காரை ஓரிரு வருடங்களில் சாலையில் காணலாம் என கூகுள்  நிருவனத்தினர் கூறியுள்ளனர்.2018- ல் நிசான் இந்த தொழிநுட்பத்தை ஒரு படி முன்னேற்றிக் கொண்டு வர உள்ளது. அதனால் இதில்  கூடுதலாக  மேலும் பல முன்னேற்றங்களையும் சிறப்பம்சங்களையும் கொண்டு வர உள்ளது .

nissan-driverless-car-7 சாலைகளில் உள்ள இடர்பாடுகளையும்  தானாகவே கண்டறிந்து தடுக்கும் முறைகள் உணவகங்களை காண்பிக்கும் முறை போன்றவற்றையும் சேர்த்து தயாரிக்க உள்ளது. கூகுளின் தானியங்கு கார் வந்த பின் பயனர்களுக்கு நிஸ்ஸான் காரை கையாளுவது எளிமையாக இருக்கும் . மேலும் கூகுல் காரில் இல்லாத அம்சங்கள் பலவற்றையும்  இந்த காரில் சேர்க்க உள்ளது.இதனால் வருடத்திற்கு ஓட்டுநர்களால் ஏற்படும் 90%விபத்துகள் தடுக்கப்படும் .கூகுல் கார் வெளியான பிறகு நிசான் இந்த காரை வெளியிட உள்ளதால் தானியங்கு கார்கள் பற்றிய அச்சமோ அல்லது குழப்பமோ மக்களின் மனதில் இல்லாமல் இருக்கும். இதனால் நிசான் வியாபார ரீதியாக லாபம் அடைய வாய்ப்புண்டு.

 

You might also like

Comments are closed.