அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :

985

 1,281 total views

பிடிக்காத அல்லது  வேண்டாத   ஒரு நபரின் தொடர்பிலிருந்து  விலகி இருக்க அவர்களது  எண்ணை   பிளாக் லிஸ்ட்டில் போடுவது என்பது  அனைவரும்  அறிந்ததே !    அதுபோலவே நமது சொந்த மொபைல் போனில் ஒருவருக்கு தகவல் அனுப்பும்போது,  நம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை.அதற்காகவே  தனி மனித சுய பாதுகாப்பு கருதியே அடாப்ட்டின் உதவி கொண்டு பிறருக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற  தகவல்களை மட்டும் மறைத்து அனுப்பலாம்.

அடாப்ட்:
அடாப்டின் மூலம் நீங்கள் தனியார்  (பிரைவேட் ) என்று மார்க் செய்யும் அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் பார்க்காதபடி செய்யலாம். இதில் கூடுதலாக  உள்ள ஆட்டோ சின்க்ரனைசிங் நுட்பத்தால் நாம் எந்த ஒரு புது சாதனத்தினை  வாங்கினாலும்  பழைய சாதனத்திலுள்ள அனைத்து  தொடர்புகளையும்  எளிதில் மாற்றிக் கொடுக்க கூடியது. மேலும் நீங்கள்  விரும்பாத உறவுகளுடன் பேச விருப்பமில்லாத நிலையில் அவர்களை பிளாக் செய்யவும், மேலும்  உங்கள் சமந்தப்பட்ட எந்த தகவலையும் அவர்களுக்கு அனுப்பாத வண்ணமும் செய்யப்படுகிறது. உதாரணமாக  ஒரு உள்ளடக்கத்தில்   உங்கள் பிறந்த நாளை மட்டும் யாரும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால்   அதனை மட்டும் மறைத்து விட்டு மற்ற செய்திகளை பயனர்களுக்கு காட்டும்.     இதனால்  தனி மனித  சுதந்திரத்திற்கு எந்த வித பாதிப்புமின்றி  பயனர்கள்   தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக    நாம் புதிதாக மாற்றிய  வீட்டு முகவரியை  நண்பருக்கு அனுப்பும்போது அவர்களின் சாதனத்தை மூன்றாமவர்  ஒருவர் பார்க்கும்போது அதனை எளிதில் எடுத்து தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பிரச்சனைகளுக்காகவே   அடாப்ட் ஒரு நல்ல வழியினை  உருவாக்கித் தந்துள்ளது.

You might also like

Comments are closed.