ஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank

453

 960 total views

மின் வணிகத்தில்  ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர்  அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

softbank_logo

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க் நிறுவனத்தின் தலைவர் மஸயோஷி ஸோன் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளைச் செய்யவுள்ளதாக மஸயோஷி ஸோன் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மின் வணிக நிறுவனமான ஸ்னாப்டீல் ரூ. 3,760 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, ஸ்நாப்டீலின் இணை நிறுவனர் குணால் பெஹல், புது தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில், “இந்த ஆண்டு ஏற்கெனவே 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இப்போது, ஸாஃப்ட்பாங்கின் புதிய முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 6 கோடி முதல் ரூ. 600 கோடி வரை முதலீடு உள்ள பல்வேறு மதிப்பிலான நிறுவனங்களைக் கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை தவிர, வாடிக்கையாளர்களுக்கு விரைவாகப் பொருள்களை விநியோகம் செய்ய நாடு முழுவதும் கிடங்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

பெங்களூரில் R&D  என்று சொல்லப்படும் ஆய்வு  மற்றும் மேம்பாட்டிற்க்காண நிறுவனம் ஒன்றை அமைக்க  இருப்பதாகவும்,  இதன் மூலம் 500 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

சில மாதங்களுக்கு முன் இதே ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இந்தியாவின் ரத்தன் டாட்டா  முதலீடு  செய்து இருந்தார். இதே போல  அமெரிக்காவின் அமெசான் 2 பில்லியன் டாலர் இந்தியாவில் இந்த ஆண்டு  முதலீடு  செய்துள்ளது. இதேபோல 133.77 மில்லியன் டாலரை Ebayவும் முதலீடு  செய்துள்ளது.

 

இப்படி  வேகமாக வளர்ந்து வரும் மின் வணிக துறையில்  அடுத்த ஒரு  வருடத்தில் இன்னும் 100 பில்லியன் முதலீடு  அதிகரிக்கும் என்றும் 2017 அது 1 ட்ரில்லியனாக இருக்கும் என  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த  துறை வேகமா வளர்வதால் இதற்கு  உள்கட்டமைப்பு,  போக்குவரத்து வசதி, சேமிப்புக்  கிடங்குகள், போன்றவைகளுக்காக இன்னும் அதிக முதலீடு  தேவைப்படும் எனவும் தெரிவித்தனர்.

 

இன்று நாடு முழுவதும் 243 மில்லியன் ஆர்வமுள்ள  பயனாளர்கள்   இருப்பதாக பல்வேறு  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. இதே போல்  ஒவ்வோரு  ஆண்டும் 38 சதவிதம் மின் வணிகம் இங்கு  வளர்ச்சியை அடைவதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. இன்று  இந்த சந்தையின் மதிப்பு  15 பில்லியன் அமெரிக்க டாலர்  ஆகும்.  இன்னும் ஐந்து  வருடத்தில் இது 100 மில்லியனாக மாறும் எனவும் தெரிவிக்கின்றனர்.

 

இன்று பாரம்பரியமான முறையில் சில்லரை வணிகம் நடத்தி வரும் ரிலைன்ஸ் மற்றும் ஆதித்யா போன்ற  பெரும் குழுமங்களும் இனி மின் வணிகத்தினை துவங்க வாய்பிருப்பதாகவும் ஆய்வுகள்  சொல்லுகின்றன.

 

இனி  ஒரு  சில பெரும் முதலைகள்  மட்டுமே சில்லரைவணிகம் என்னும் பெரும் கடலை  ஆளும்.

You might also like

Comments are closed.