மேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :

30

இணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக் கூறி பிடித்த டிசைன்களை பெற முடியும்  . ஆனால் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் சாத்தியமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளவே ஃபன் அப் என்கிற டோக்கியோவை சார்ந்த நிறுவனம் மோனோமி என்ற பயன்பாட்டை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இணையத்தில் இதுபோன்ற சேவைகளை 2011லிருந்தே வழங்கிவருகிறது குறிப்பிடத்தக்கதே .

மோனோமி :

மோனோமியின் மூலம் இணையத்தில் ஸ்மார்ட்போன்களின் உதவிகொண்டு  அணிகலண்களை நமக்கு பிடித்த விதத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம். மோனோமியின் உதவிகொண்டு 1500 பாகங்கள் வரை பயனர்கள் மறுசீரமைத்துக் கொள்ளலாம். மோனோமி உதவியின் மூலம் மக்கள் 1500 டிசைன்களின் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த டிசைன்களை சொந்தமாக   வடிவமைத்து கொடுத்தால் மோனோமியில் உள்ள சிறந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு உங்கள் அபிமான டிசைன் கொண்ட நகைகளை உங்கள் வீட்டிலேயே பெறலாம்.

இதனால் ஏற்கனவே வடிவமைத்து வைத்திருந்த டிசைன்களை வாங்குவதை விட   சொந்தமாக டிசைன்களை நாமே உருவாக்கிய ஒரு புதிய அனுபவத்தை தரக்கூடியது.இணையத்தில் மக்கள் டிசைனை பதிவேற்றம் செய்த சில நேரங்களுக்குள்ளேயே அல்லது குறிப்பிட்ட சில வாரங்களில் வேலைப்பாடுகள் செய்து ஒப்படைக்கப்படுகின்றன.

 

                       இதனால் மக்கள் தங்களின் சொந்த கற்பனையில் உருவான டிசைன்களை அணிந்து கொண்ட ஆவலைப் பெறலாம். சாதாரணமாக மொபைல் தளத்தில் விளையாட்டுகளில்தான் அதிகமாக விரல்களை பயன்படுத்தி ஆர்வமுடன் விளையாடுவோம். சற்றே மாறுதலாக  இங்கே சொந்தமாக நமக்கு பிடித்த பொருள்களை தயாரிப்பது ஒரு புதிய அனுபவமே. உதாரணமாக இதில் ஒரு காதணியின் மேல்பாகமும் மற்றொரு காதணியின் கீழ்பாகமும் பிடித்திருந்தால் இரண்டையும் சேர்த்த டிசைன்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவார்கள் . அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக  மோனோமியில் எளிதாக இரண்டையும் பொருத்து அதே மாதிரி ஆபரணங்களைப் பெறலாம். இதனால் பயனர்களையே  புது டிசைன்களை உருவாக்கி அதன் மூலம் பயன்பெறுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

 

You might also like

Comments are closed.