உலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:
829 total views
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பில் வாணிகத்திற்கு உதவும் முக்கிய சந்திப்புகளை ஆபிஸ் 365ல் அறிமுகபடுத்தியுள்ளது .இதில் ஸ்கைப் பிராட்காஸ்ட் கூட்டம், PSTN கான்பிரன்சிங், PSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் PBX போன்றவைகள் அடங்கும். ஏப்ரல் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிகம் தொடர்பான ஸ்கைப்பினை அறிமுகபடுத்தியது . அப்போது மைக்ரோ சாப்ட் டிசம்பர் மாததிற்குள் வணிகம் தொடர்பான மேலும் பல நுட்பங்களை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தது. கூறியபடியே இந்த மூன்று அம்சங்களைப் பற்றியுமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது .இந்த மூன்று அம்சங்களும் டிசம்பர்-1 லிருந்து துவங்க உள்ளது .
ஸ்கைப் ஒளிபரப்பு கூட்டம் :
ஸ்கைப் ஒளிபரப்பு கூட்டத்தின் (ஸ்கைப் மீட்டிங் பிராட்காஸ்ட்) மூலம் பத்தாயிரம் மக்கள் வரை கலந்துரையாட செய்யலாம் . இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் கணினியிலோ அல்லது மொபைல் சாதனத்திலிருந்தோ இணையத்தை அணுகலாம் மற்றும் பிங்க் பல்ஸ் போன்ற நேரடியாக வாக்களிக்கும் நுட்பத்திலும் யாமரிலும் கலந்துரையாடலாம் . மைக்ரோசாப்ட் இந்த அம்சத்தை நேரடியாக பல மக்கள் கூடியிருக்கும் ஒரு அறையில் நடக்கும் சந்திப்பை போன்ற அனுபவத்தை உருவாக்க எண்ணி அமைத்துள்ளனர் .
PSTN கான்பிரஸ்சிங் :
ஆபிஸ் 365 யின் உதவியுடன் வணிக சந்திப்பில் டையல் செய்வதன் மூலமாக லேன்ட்லைன் (அ) மொபைல் போனின் வழியாக ஸ்கைப் கலந்துரையாடலுக்கு வரலாம் . இந்த சந்திப்பு முற்றிலும் இணையமில்லாத மக்களையும் கூட கலந்துரையாடலில் செயலாற்ற வைக்கும் .
PSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் pbx :
இதன் மூலம் வாணிகம் தொடர்பான அழைப்புகளை ஏற்கவும், அழைக்கவும் முடியும் . மேலும் கூடுதல் சிறப்பம்சங்களான அழைப்புகளை ஹோல்ட் செய்தல் ,நிறுத்தி வைத்தல், அழைப்புகளை வேறு எண்ணுக்கு பரிமாற்றுதல் , குரல் பதிவுகள் போன்ற அமைப்புகளைத் தர முடியும் . இந்த அனைத்து சிறப்பம்சங்களும் அமெரிக்காவில் தற்போது துவக்கியுள்ளது . கூடிய விரைவில் மற்ற நாடுகளிலும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிஸ் 365, பயனர்களின் வாணிகம் தொடர்பான சந்திப்பை இனி குரல் மற்றும் வீடியோ சேவைகளில் நேரடியாக பாதுகாப்பான அமைப்புகளுடனும் அமைத்து தரும் . இவை உயர்தர வீடியோ சேவைகளையும் தரவல்லது .ஸ்கைப்பின் மூலம் உங்கள் உள்கட்டமைப்புகளை எளிமைபடுத்தவும் செலவுகளை குறைக்கவும் இது ஒரு சிறந்த வழியே .
Comments are closed.