‘India Gateway’ Internship Program
1,635 total views
விப்ரோ நிறுவனம் ‘India Gateway’ Internship Program ஒன்றை UK university பல்கலைகழக மாணவர்களுக்காக ஆரம்பித்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் 100000 தகுதியுள்ள மாணவர்களை தேர்வு செய்வது. இந்த Program தேர்வுமுறை வருகிற ஜூலை மாதம் முதல் துவங்குகின்றது. இந்த Program-க்கு தகுதி என்று பார்த்தால் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர் அல்லது தேர்ச்சி அடைபவர்க இருக்கலாம். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கணிதவியல் பாடத்தினை தனது கல்வியியலில் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.
விப்ரோவின் திறமை மதிப்பிடும் குழு மாணவர்களை நேர்காணல் முறையில் அவர்களது தொழில் தகுதி மற்றும் பிரச்சனை தீர்க்கும் திறன் ஆகியவைகளை பரிசோதித்து சிறந்த 20 மாணவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இது ஒரு UK-India collaborative training program. இதன் காலம்ஒரு வருடம். முதல் மூன்று மாதம் கடுமையான தொழில்நுட்ப அறிமுக பாடத்தையும், ஆறு மாத காலம் வேலை பயிற்ச்சியும், மூன்று மாத காலம் திட்டக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் பயிற்ச்சியும் வழங்கப் போகின்றனர்.
நம்ம ஊர்ல ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர். இவர்களையெல்லாம் UK தர மொழிப் புலமைக்கு மாற்ற முயற்சிக்காமல்., இப்படி செய்வது நியாயமா?
சரிந்து வரும் ஐரோப்பா வேலை வாய்ப்புகளால் இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் ஐரோப்பாவில் வேலை பார்க்கும் விதமாக அவர்களின் திறமைகளை வளர்க்க விப்ரொ முயற்சிக்கிறது.
Comments are closed.