PC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:
846 total views
இனி PC கேம்களை உங்கள் தொலைகாட்சியில் காணலாம் . சாதரணமாக கணினியில் விளையாடும் கேம்களை உங்கள் வீட்டு தொலைகாட்சியில் காணலாம் .அதற்கு வால்வ் தற்போது ஒரு புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகபடுத்துகிறது. அதுதான் ஸ்டீம் லிங்க் . இதன் மூலம் PC கேம்களை தொலைகாட்சியில் இணைத்து விளையாடலாம் .
எப்படி செய்யும் ?
ஸ்டீம் லின்க்கை உங்கள் தொலைக்காட்சியில் பொருத்தும் போது ஸ்டீம் லின்க் ஒரு பாலமாக செயல்பட்டு கணினியின் ஈதர்நெட்ட்டின் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ தரவுகளை கணினியிலிருந்து டீ.வீ க்கு மாற்றிக் கொடுக்கிறது. ஓவ்வொரு கேமும் அந்தந்த கனிணியின் செயல் திறனை பொறுத்துதான் தொலைகாட்சியிலும் செயல்படும்.
இதன் மூலம் அனைத்து வகையான தொலைக்காட்சியிலும் இது ஆதரவளிக்கவல்லது. இந்த ஸ்டீம் லின்ங்க்கின் உதவியால் வீட்டிற்குள் விரும்பிய இடத்தில் PC கேம்களை விளையாடலாம்.
தற்போது வெளியாகி இருக்கும் விண்டோஸ் -10 இன் நுட்பத்தை xbox கேமுடன் இணைத்தால் மேலும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் வெளிவர வாய்ப்புள்ளது.. விரைவில் மைக்ரோசாப்ட்டுக்கும் வால்வ் நிறுவனத்திற்கும் இடையில் இணைப்பு உருவாகும் என எதிர்பார்க்கலாம்.இந்த ஸ்டீம் லின்க்குகள் நவம்பர் மாதம் முதல் சந்தைக்கு வரும் .தற்போது அதன் முன் உத்தரவுகளை வழங்கி கொண்டு வருகிறது. இதன் விலை 50 $ என அறிவித்துள்ளது.
Comments are closed.