1,295 total views
குழந்தையாக இருக்கும்போது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருக்கும் சிறிய பொம்மைக் காரை பயன்படுத்திய ஞாபகம் இருக்கிறதா? ஆம் அந்த காரை தான் தற்போது அளவில் பெரிதாக சாலைகளில் ஓட்டிச் செல்லும் வசதியுடன் தயாரித்துள்ளனர் லண்டனைச் சேர்ந்த ஜான் பிட்மட் மற்றும் அவரது சகோதரர் கோப் . அந்த சிறிய காரில் நம் அக்கம் பக்கத்து வீடு மற்றும் தோட்டங்களில் சென்று விளையாடியிருப்போம் . தற்போது சாலைகளில் ஓட்டி செல்லும் அளவிற்கு பெரிதான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. “சின்ன வயதில் இது போன்ற காரை பார்த்து ரசிப்பேன். ஆனால் விளையாடியதில்லை! அனால் இப்போது வயதாகி விட்டது” என்று எண்ணுபவர்களுக்காகவே வடிவமைக்கப்படுள்ளது. ஆம் விளையாட வயது தேவையில்லை . இந்த பெரிய பொம்மை காரை வாங்கி சிறு வயதில் நிறை வேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் .
இந்த கார் 2013 இல் ஆட்டிடியுடு என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பின் BBC யிடம் சென்றது. தற்போது முக்கிய விஷயம் என்னவென்றால் இதை இபே நிறுவனம் விற்பனை செய்து வருவதுதான். பழைய காரினால் ஏற்ப்பட்ட பொருளாதார அழிவை இந்த பெரிய காரின் மூலம் பெறலாம் என நம்புகின்றனர்.
இந்த காரை தயாரிக்க 16 வாரங்கள் எடுத்து கொண்டதாக கூறுகின்றனர். மேலும் இதில் சாதாரண கார்களில் உள்ளது போலவே அனைத்து அம்சங்கள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவர் அமரும்படி கொண்ட இருக்கையும் 70mph வேகத்தையும் கொண்டது கூடவே 5000 மைல்களை சாலைகளில் கொடுக்கக் கூடியது. கண்ணாடி இல்லாத பெரிய கதவுகளையும் , முகப்பு விளக்குகள் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது வகையான காரை சிறுவயதிலிருந்தே பார்த்து பழகியிருப்பதால் உங்களுக்கு ஒரு பரிச்சயமான வாகனாமாக இருக்கும் .
இந்த குழந்தைகளுக்கான காரை சிறுவயதில் பயணம் செய்யும் அதிஷ்டத்தை தவற விட்டிருந்தால் கவலை வேண்டாம். இ -பே நிறுவனம் விற்பனை செய்கின்ற காரை வாங்கி உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் பயனர்களே!
Comments are closed.