முகமூடி : தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ

1,056

 2,208 total views

வருடத்திற்கு ஒரு புதிய அகசாய சூரன் (Super Hero)  கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சினிமா பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

 • Bat Man – தனது பண பலம் மூலம் ஆயுதங்கள் செய்து மக்களை காக்கும் வீரன்.
 • Super Man – வேற்று கிரகத்தில் இருந்து வந்து மக்களை காக்கும் வீரன்.
 • Spider Man – சிலந்திக் கடிபட்டு, சக்தியை மக்களை காப்பாற்ற பயன்படுத்தும் வீரன்.
 • Hit Man – சுயமாக கொள்கைகளை வைத்து பணத்திற்காக கொலை செய்யும் வீரன்.
 • iorn Man – தனது பண பலம் மூலம் ஆயுதங்கள் செய்து மக்களை காக்கும் வீரன்.
 • V for Vendetta – இங்கிலாந்து பாராளுமன்றத்தை தகர்க்கும் போராளி.
 • Fantastic Four – அறிவியல் விபத்தால் பெற்ற சக்தியை மக்களை காப்பாற்ற பயன்படுத்தும் வீரர்கள்.
 • Van Helsing – ரத்தக் காட்டெரிகளை (கொசு அல்ல) அழிக்கும் வீரன்.
 • IP Man – Bruce Lee  இன் குரு மற்றும் மாபெரும் குங்ஃபூ வீரர்.
 • James Bond – அமெரிக்க உளவாளி
 • Ghost Rider –  சாத்தான் கூட்டத்தை அழிக்கும் வீரன்.

இவர்கள் போல் இன்னும் பலர் உள்ளனர். இவர்கள் எல்லாம் பெரும்பாலும் சிறுவர்களின் கதைப் புத்தகங்களில் வந்த தொடர் கதைகள் மற்றும் நாவல்கள்.

இதுவரை Bat Man திரைப்படம் மட்டும் சுமார் 16 திரைப்படங்களாக 1946 முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் Christopher Nolan தான் BatManஐ ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு ஒரு மாவீரன் ஆகிறான் என தனது 3 படங்களின் மூலம் செதுக்கிக் காட்டினார்.

இந்த மூன்று படங்களின் வெற்றியின் மிக முக்கியமான காரணம் 3:

1. Director – Christopher Nolan (Inception, Prestige, Memento)
2. Music Director – Hans Zimmer ( Jack Sparrow, JigSaw, Van Helsing all got nice effects from him only)
3. Hero – Christian Bale  ( He is the one and only dedicated actor in Hollywood. He is a mixture of Kamal, Surya & Vickram)


முகமூடி படம் பற்றி சொல்லாமல் ஏதோ சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா.

முகமூடி எனும் இந்தக் கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இடம் பிடிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. ஆனால்., இரண்டே இரண்டு விதமான காட்சியமைப்பை மட்டுமே வைத்து ஒரு சூப்பர் ஹீரொ படம் எடுக்க முயன்றுள்ளார் மிஸ்கின் (Low angle & Long shot).

இது தமிழகத்தை காக்க உருவாகும் ஒரு “Batman” னு போட்டு ஒருவேளை “The Batman Begins” படத்தை அப்படியே தமிழாக்கம் செய்து ஜீவாவை முகமூடியாக நடிக்கச் செய்திருந்தால் உண்மையில் மிக அற்புதமாக இருந்திருக்கும்.

வெறும் Batman Begins  மற்றும் IP Man கதையில் வரும் காட்சிகளை மட்டுமே வெட்டி ஒட்டி வைத்துள்ளார்.

 • வறுமையில் உள்ள மாஸ்டர் (IP man மாணவர்கள் தரும் பணம் வாடகைக்கு போதாது)
 • முகமூடி மற்றும் ஆயுதம் செய்யும் கருப்பாக இருக்கும் தாத்தா  (Morgan Freeman in Batman)
 • பரிவுடன் கவனிக்கும் மற்றொரு தாத்தா. சாருலதா இந்த பத்திரமாக வர இருந்தார். (Michael Caine @ Alfred in Batman))
 • குங்குபூ தெரிந்த வில்லன் கூட்டம் (Leage of Shadows / Ninja style villians are primary enemy for batman)
 • இறுதியில் கிறுக்குத்தானம் செய்யும் வில்லன் (Joker in Batman Dark Knight)
 • முகமூடி எனும் பெயரை போடும் போது கூட “Marvel” பெயர் வரும் முறையிலேய உள்ளது.
 • பின்னணி இசையை அப்படியே காப்பி செய்துள்ளனர். (All darkknight sound tracks)
 • IP Man இல் வரும் சண்டை அமைப்பு அப்படியே உள்ளது.

படத்தின் மிகப் பெரிய ஓட்டை  முகமூடிகாக காத்திருக்கும் போலீஸ்… வந்திருப்பவர் முகமூடியா எனத் தெரியாமல் முகமூடி வேடத்தில் வந்த வில்லனிடமே தங்கத்தை கொடுத்திருந்தால்?

தமிழில் ஒரு நல்ல சூப்பர் ஹீரொ படம் வந்துவிட்டது எனப் போய் பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் Batman Begins & IP Man. இசை, சண்டை, கேமிரா என அனைத்தும் அப்படியே உள்ளது. மாற்றத்தை காட்டவேண்டும் என்பதற்காகவே… மிஸ்கினின் அந்த தேவையில்லாத Long Shots & Low angle shots.

இவரின் சொந்த முயற்சியில் வந்த ஓட்டைகள்

 • இப்படி ஒரு கிறுக்கு மாக்கண் கதாநாயகி இருப்பது தேவையா?
 • ஒரே வசனத்தை பேசும் அப்பா மற்றும் நண்பர்கள்.
 • நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கும் சப்பை காட்சி.
 • திருடனை பாட (பேச) வைக்க ஒருத்தரும் வரல?
 • ஜீவா அப்பாவ கடத்துன அப்றம் என்னா ஆச்சு?
 • தங்க நகை சரியா இருக்கானு பார்க்கும் போது முகமூடிய சுட வேண்டியது தானே?
 • வில்லன் கிட்ட ஒரு Sniper கூடவா இல்ல?
 • அவ்ளோ பெரிய கிளைமாக்ஸ் ல மெயின் வில்லன் பாதி நேரம் டீ குடிக்க போய்ட்டானா?
 • யப்பா… கதாநாயகி முன்னாடி தான் அந்த கடேசி சண்டை போடானுமா?
 • முகமூடி யாருன்னு தெரிய வர்றப்ப ஒரு பரபரப்பும் இல்லை.

அஞ்சாதே கிளைமாக்ஸ் கண்டிப்பாக அவ்வாறு பல Long Shots களுடன் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் முகமூடி போன்ற படத்தில் கிளைமாக்ஸ் வேகமாகவும் சற்று விவேகமாகவும் இருக்க வேண்டும்.

அந்த இரண்டு தாத்தாவும் குழந்தைகளை காப்பாற்றும் போது என் நண்பன் சொன்னான் “வில்லன் Security ரொம்ப வீக்கா இருக்கே”.  வில்லன் தனது அந்த அகோர முகமூடியைக் கழட்டாமல் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Batman & IP Man படத்தை அப்படியே காப்பி அடித்த இயக்குநர் ஒரு வேலை அதில் வரும் அற்புதமான வசனங்களை முயற்சி செய்து இதிலும் பயன்படுத்தி இருந்தால் சற்றே நன்றாக இருந்திருக்கும்.

உன் பெயரையாவது சொல் என கதாநாயகி கேட்கும் போது., கதாநாயகி தனக்கு அறிவுரையாக சொன்ன அதே வரிகளை … தான் அவ்வாராகவே மாறிவிட்டதாக சொல்லும் இது போன்ற விவேகமான முறையில் தான் முகமூடி யார் என்பதை பிறருக்கு காட்டியிருக்க வேண்டும். ஆனால் படத்தில் தான் வசனம் என்ற ஒன்றே இல்லையே.

கோ திரைப்படத்தின் பின் ஜீவாவின் மேல் அதிக எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. முகமூடி கதாபாத்திரம் ஜீவாவை விட வேறு எவராலும் அடுத்த பத்து வருடங்களுக்கு செய்ய இயலாது.

இந்தப் படம் வெற்றி பெற்றாலும் இல்லையென்றாலும் கண்டிப்பாக அடுத்த பாகம் வர வேண்டும். அது கண்டிப்பாக ராஜா மௌலி (மகதீரா, நான் ஈ) போன்ற சிந்தனை வளம் அதிகம் உள்ள ஒரு இயக்குநர் இயக்க வேண்டும். கண்டிப்பாக அதிலும் ஜீவா தான் முகமூடி.  முகமூடி படம் கண்டிப்பாக அனைவராலும் ரசிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக மொக்கையாக இருக்காது.

ஒருவேளை நீங்கள் மிஸ்கின் ரசிகராக இருந்து நான் தவறாக சொல்கிறேன் என நினைத்தால் தயவு செய்து “The Batman Begins” மற்றும் “IP Man” படங்களைப் பாருங்கள்.

You might also like

Comments are closed.