குரோமின் குரல் தேடலை நீக்கிய கூகுள்:
414 total views
கூகுல் இந்த வாரம் குரோம் 46 ஐ அறிமுகபடுத்தியது. ஆனால் இதில் மிகபெரிய மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. அதாவது “ok google ” என்று காட்டியவுடன் குரல் தேடலைக் கொண்டு உலவிக்குச் செல்லும் அம்சம் ஒன்றை நீக்கியுள்ளது. இது உண்மையில் பெரிய மாற்றமே.
கூகுல் முதலில்”ok google ” குரல் தேடலை 2013 இல் வெளியிட்டது. பின் இதை நேரடியாக உலவியின் பக்கத்தில் சேர்த்தது.இதனால் பயனர்கள் நேரடியாக கூகுல் பக்கத்திற்கு சென்றோ அல்லது இயல்பாகவே கூகுல் பக்கத்தை கொண்டிருந்தாலோ அல்லது “ok google ” குரல் தேடலில் சென்றோ தேட ஆரம்பிக்கலாம்.
இந்த குரல் தேடலை நீக்கியதால் டெஸ்க்டாப்பின் குரோம் தான் பாதிக்கும் என கூறுகின்றனர். இதனால் விண்டாஸ் , மேக் , லினக்ஸ் பயனர்கள் இனி க்ஹ்ரோமின் குரல் தேடலை தொடர முடியாது. அதற்காக மொத்தமாக நாம் “ok google ” தேடலை இழக்கவில்லை . இணையத்தின் எந்த google .com பகுதியிலும் மைக் ஐக்கானை கிளிக் செய்தால் போதும்.
“OK Google” அம்சத்தை அவ்வளவாக பயனர்கள் பயன்படுத்தவில்லை எனபதாள் நீக்கி விட்டனர் .இதே காரணத்தைதான் இந்த வாரம் ” The notification center ” ஐ நீக்கியபோதும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பயன்படுத்தாத காரணத்தினாலேயே தான் இவை நீக்கபட்டுள்ளன. இது கூகுளின் அர்த்தமுள்ள முடிவாகத்தான் இருக்கும். கூகுல் அடுத்த வெளியிடும் குரோம் 47லும் மேலும் பல மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.