ஆபத்துக்கால சூழ்நிலைகளில் உதவும் 7 முக்கிய பயன்பாடுகள் :

536

 943 total views

இயற்கை மற்றும் பேரழிவு சம்பவங்கள் என்பது மிகவும் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்றாகும். இயற்கை பேரிடரால் எந்தவொரு மனிதனும் பாதிக்கப்படலாம். மேலும் இவை எந்தவொரு நேரத்திலும் யாருக்கும் நேரலாம்.அதனால் பேரிடர்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதே சிறந்தது.

சிக்கலான நேரங்களில் தகவல் தொடர்புக்கு உதவுவதில் சமூக வலைதளங்கள் தற்போது பங்கெடுத்து வருகின்றன ! இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மைக் காப்பதில் தற்போது சமூக வலை தளங்கள் அதிகமாக பங்கெடுத்து வருகின்றன. அதில் முக்கியமான 7 பயன்பாடுகள் வாசகர்களின் பார்வைக்கு…

கார்டிலி :-
                       கார்டிலியில் உள்ள உட்புற பொருந்துதல் (Indoor Positioning Systerm) அமைப்பின் மூலம் ஒரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களிலும் கூட நாம் பாதுகாப்பினை உணரலாம். ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்ட இந்த மொபைல் பயன்பாடு ஒரு ஒட்டுமொத்த நிறுவனத்தையே ஆதரிக்கும் அளவிற்கு திறன் கொண்டது.
Screen-Shot-2015-11-17-at-11.42.20-AM-520x451
இந்த கார்டிலியில் ஆபத்திலிருக்கும் நபரின் புவியியல் அமைப்பை மட்டும் குறிப்பிடாமல் அவர்  எந்த கட்டிடத்தின் எந்த அறையில் இருக்கிறார் போன்ற தகவல்களையும் வழங்கக் கூடியது.
உதாரணமாக, தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவரை காப்பாற்ற பாதிக்கப்பட்டவர் கட்டிடத்தின் எந்த தளத்தில் இருக்கிறார் என்பது முதல் அவர் எந்த அறையில் இருக்கிறார் போன்ற தகவல்களை வழங்கக் கூடியது.
லைன் மெசேஞ்சர் :-
Screen-Shot-2015-11-17-at-11.40.58-AM-520x445
               லைன் மெசேஞ்சர் என்பது அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பதிவிறக்கம் செய்து உடனுக்குடன் குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை அனுப்பிக் கொள்ள ஜப்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. லைன் தற்போது தீவிர பயனர்களை கொண்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயனர்கள் ஆபத்துக்காலங்களில் இணைந்து தங்கள் நிலையை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளலாம்.
பேரிடர் எச்சரிக்கை (டிஸாஸ்டர் அலர்ட்):
Screen-Shot-2015-11-17-at-11.18.05-AM-520x448
            பேரிடர் வருவதற்கு முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த பயன்பாட்டினை    பசுபிக் பேரிடர் மையத்தினர் உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.  இந்த எச்சரிக்கை பயன்பாட்டை பயன்படுத்தினால் பேரிடர் ஏற்படக் கூடிய இடங்களையோ , அல்லது மக்களைளோ அல்லது உடைமைகளையோ முன்கூட்டியே காட்டும். உலகளாவிய முறையில் இந்த பயன்பாட்டை தற்போதைய நிலவரத்தின்படி 1.5 மில்லியன் மக்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
லைப் 360 :
Screen-Shot-2015-11-17-at-11.19.31-AM-520x452
             ஒரு பேரிடர் நிகழுகின்றது அல்லது நிகழப் போகிறது என்று தெரிந்தால் முதலில் நமக்கு தோன்றுவது அந்த இடத்தில் நமது உறவினர்கள் அல்லது நமது அன்புக்குரியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த பகுதிகளில் இருக்கிறார்களா? என்பது தான். இதற்காகவே லைப் 360 பயன்பாட்டின் மூலம் பேரிடரின்போது குடும்ப உறுப்பினர்களின் நலத்தை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நமது அன்புக்குரியவர்களின் நலனை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளலாம். இதில் மேலும் உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் அதற்காக பேனிக் எச்சரிக்கை பயன்பாடுகளும் கூடவே சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை எந்த நபரிடமாவது மொபைல் சாதனங்கள் இல்லாவிடில் அவர்களுக்கு கூடுதலாக GPS சாதனங்கள் கட்டண சேவையோடு வழங்கப்படுகின்றன .
சைரன் GPS :
Screen-Shot-2015-11-17-at-11.20.39-AM-520x449
       சைரன் GPS என்பது ஒரு ஆபத்துக்கால தகவல்தொடர்புக்கான கூட்டு நடவடிக்கையாகும்.இந்த சைரன் GPS ன் உதவியால் ஒரு ஆபத்துகால நேரத்தில் நாம் தீயணைப்பு துறையை அணுகும்போது அந்த சமயத்தில் பல அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்து கொண்டே இருக்கும். அதில் முதலில் அழைத்தவர்களையும் அவற்றுள் மிகவும் அருகில் இருப்பவர்களின் அழைப்புகளையும் முதலாவதாக ஏற்று அதனோடு சில விழிப்புணர்வு சம்பந்தமான காட்சிகளையும் அவர்களுடன் பகிர்கிறது.
அச்சுறுத்தும் சிவப்பு நிற பொர்த்தான்கள் (ரெட் பேனிக் பட்டன்) :
Screen-Shot-2015-11-17-at-11.25.53-AM-520x445
               இந்த பொத்தானில் ஒருவரிடமிருந்து தகவல் பல நபருக்கு உடனடியாக பரிமாற்றப்படும். சிவப்பு பட்டனை அழுத்தும்போது இந்த பயன்பாடு உங்களின் GPS அமைப்பை கூகுள் வரைப்படத்துடன் ஒன்றிணைத்து நீங்கள் இருக்கும் இடத்தை குறுந்தகவலாகவோ, மின்னஞ்சலாகவோ உங்கள் மொபைலில் இருக்கும் முக்கிய தொடர்புகளுக்கு அனுப்பும் சிறப்புத் தன்மை வாய்ந்தது.
ICE (ஆபத்து மற்றும் அவசர காலங்களில்) :
                Screen-Shot-2015-11-17-at-11.26.31-AM-520x432                             இந்த பயன்பாடு பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் தற்போது 13 மொழிகளில் தருகிறது.இது மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு அவசர காலங்களில் முதலில் அழைக்கும் நபர்களுடன் பேசவும் ஆபத்துகாலத்தில் மருத்துவருடன் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தலாம்.
                   Caribbean_Petroleum_Corporation_Disaster  என்னதான் இருந்தாலும் எல்லா பயன்பாடுகளும் அனைத்து கால கட்டத்திலும் நமக்கு உதவும் என்று சொல்லிவிட முடியாது.  தொழிநுட்ப வளர்ச்சியை இந்த மாதிரியான  முக்கிய தருணங்களில்  பயன்படுத்துவதும்  சிறந்ததே !அதனால் நாம் ஏறத்தாழ இந்த மாதிரியான பயன்பாடுகளை பெறுவதால் குறைந்தபட்சம் பேரிடரிலிருந்து நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் ஓரளவு  பாதுகாத்துக் கொள்ளலாம்.

You might also like

Comments are closed.