2,065 total views
முகநூல் இணையதளத்திற்கு வெளியே நீங்கள் எந்தெந்த இணையதளங்களை, எந்தெந்த அலைபேசி ஆப்களை எந்த தேதியில், எத்தனைமுறை பார்த்தீர்கள் எந்தெந்த பக்கங்களை பார்த்தீர்கள் எனும் தகவல்களை முகநூல் தளம் பல ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளது. அதை உங்களுக்கு உகந்த விளம்பரங்களை காட்ட பயன்படுத்தியது. சிங்கப்பூர், ஐரோப்பா, அமேரிக்கா அரசுகள் இந்த திரட்டப்பட்ட தகவல் விவரங்களை முகநூல் பயனர்களாகிய நமக்கு தெரியப்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றி முகநூல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தின. இதனால் நம்மால் இதுவரை சேமிக்கப்பட்டுள்ள நம் பயன்பாட்டு விவரங்களை அழிக்கவும், எதிர்காலத்தில் தடுக்கவும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது முகநூல். உங்கள் கணக்கில் இதை நிறுத்தி உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும்.
Comments are closed.