விரைவில் பிளே ஸ்டோரை மறந்து விடலாம் …!
2,027 total views
பெரும்பாலும் நமக்கு பிடித்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய தேடு பொறிகளை நாடும்போது அது நேரடியாக நமது கூகுளின் பிளே ஸ்டோரினை கொண்டு வரும். பின் அங்கு நமது மின்னஞ்சல் பற்றிய சில தகவல்களை ஒரு முறை செட் அப் செய்தால் பின் நாம் அதில் செயலிகளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட படிப்படியான செயல்முறைகளை தவிர்த்து தேடு பொறிகளிலேயே நேரடியாக நாம் செயலிகளைப் பெறலாம். அத்தகைய அம்சத்தை கூகுள் தற்போது அன்றாய்டில் சோதித்து வருகிறது. அதன்படி நாம் அடிக்கடி பதிவிறக்கம் செய்யும் செயலிகளை பல வழிமுறைகளை மேற்கொள்ளாமல், எப்படி தேடு பொறிகளில் ஒரு கேள்விக்கு நாம் உடனடி தகவல்களை பெறுகிறோமோ அது போலவே உங்களுக்கு பிடித்த செயலிகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனால் ஒரு செயலியை பதிவிறக்கி அதனை இன்ஸ்டால் செய்யும் வரையிலான நேரங்கள் தேவையில்லை. இனி கூகுள் குரோமின் தேடு பொறிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம். இது குறிப்பிட்ட சில தேடு பொறிகளில்தான் பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றிய தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதனால் பயனர்கள் இனி பிளே ஸ்டோரில் செலவிடும் நேரத்தினை சேர்த்து மொத்தாமாக இதனை தேடு பொறிகளில் செலவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் விரைவில் நீங்கள் பிளே ஸ்டோரை மறந்து விடும் நிலைமை ஏற்படலாம். இது இதற்குமுன் இணையத்தினை பயன்படுத்தாதவர்கள் கூட இணையத்தில் எளிதில் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.