உத்திரபிரதேசத்தில் லக்னோ TCS அலுவலகம் இந்த வருடத்துடன் மூடப்படுகிறது
இங்கு சுமார் 2000 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
607 total views
கடந்த 33 வருடங்களாக இயங்கி வந்த TATA வின் TCS அலுவலகம் உபி தலைநகர் லக்னோவில் இருந்து இந்த வருட இறுதிக்குள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 2000 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நிர்வாக வசதி காரணமாக இந்த அலுவலகத்தை மூடிவிட்டு, நொய்டா மற்றும் பிற நகரங்களில் உள்ள TCS அலுவலகங்களில் இந்த ஊழியர்கள் பணியிலமர்த்த முன்னுரிமை கொடுக்கப்படுவார்கள் என முதன்மை செயல் அதிகாரிகளுள் ஒருவரான ராஜேஷ் கோபிநாதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இது “வேலை நீக்க” நடவடிக்கை அல்ல என்றும். இட மாற்றம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 2017 நிலவரப்படி 385,809 ஊழியர்களுடன் இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக TCS விளங்கி வருகிறது. சர்வதேச மனிதவள மேம்பாட்டு அதிகாரியான அஜயேந்திர முகர்ஜீ , புதிய திறமையான பணியாளர்களை எடுப்பதே எங்கள் நிறுவனத்தின் இலக்காக உள்ளது. அது இந்தவருடமும் தொடரும் ஆனால் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே புதியவர்களை எடுக்கவுள்ளோம் எனவரும் தெரிவித்தார்.
இதே நேரத்தில் லக்னோவில் உள்ள HCL நிறுவனம் புதிதாக 800 நபர்களை இந்த அலுவலகத்திற்காக வேலைக்கு எடுக்க உள்ளோம் என அறிவித்துள்ளனர்.
Comments are closed.