Google +ல் போட்டோக்களுக்கு விதவிதமான effects
1,731 total views
Google + தளத்தை பிரபலமாக்கும் நோக்கில் பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் கூகுள் நிறுவனம் பிக்னிக் தளத்தை மூடி அந்த வசதிகளை Google +தளத்தில் இணைத்து உள்ளது. இனி உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான effect-களை Google + தளத்தில் கொடுக்கலாம்.
சிறப்பம்சங்கள்:
- போட்டோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
- தலைகீழாக உள்ள போட்டோக்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
- படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி
- போட்டோக்களின் அளவை குறைக்க Resize வசதி.
- 20 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான effect-களை கொடுத்து கொள்ளலாம்.
- உங்கள் போட்டோக்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
- போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
- முதலில் உங்கள் Google + கணக்கில் நுழைந்து Photos பகுதியை open செய்து கொள்ளுங்கள்.
- போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை click செய்து open செய்யுங்கள்.
- Lightbox Mode-ல் உங்கள் photo திறக்கும். அதில் உள்ள Creative Kit என்ற link click செய்யவும்.
- அடுத்து photo editor open ஆகும். அதில் உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான effect கொடுத்து கொள்ளலாம்.
அழகுபடுத்திய போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
Comments are closed.