அரசாங்கத்தின் மீது கோவமா?

647

 2,723 total views

கேவலமான அரசியல்வாதிகள், கேவலமான எனும் ஒரு சொல் மட்டும் போதாது இக்கால அரசியல் வியாதிகளுக்கு. ஒவ்வொருமுறையும் இந்த அரசாங்கம் செய்யும் தவறுகள் எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தும்., அந்த கோவம் எந்த கட்சி, மதம், மொழி, மாநிலம், நாடு என எந்த பரபட்சமும் பார்ப்பதில்லை., ஒரு கேவலமான அரசாங்கம் தமது மக்களை மாக்கள் என மட்டுமே நினைக்கிறது.

எதுவும் பேசாது அமைதியாக நான் சுவரை பார்த்தபடி இருக்கும் போது என் மனைவி கேட்பாள்., என்ன பேசாம இருக்கீங்க? அதற்கு பதில் சொல்லக் கூட இயலாத அளவிற்கு என் மனம் அரசுகளை எவ்வாறெல்லாம் சீர் படுத்தலாம் என எண்ணிக்கொண்டே இருக்கும்.

  • மக்களுக்கு பயப்படும் அரசு அலுவலகம்.
  • மக்களுக்கு உதவும் பண்பான காவலர்கள்.
  • மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசு திட்டங்கள்.
  • அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தும் கல்வி நிலையங்கள்.
  • லஞ்சம் வாங்குவதை பிச்சையேடுப்ததிற்கு சமமாக நினைக்கும் மனிதர்கள்.
  • அனைவரும் பயப்படும் சட்ட விதிமுறைகள்.
  • மனிதனை மனிதத்துடன் நடத்தும் சக மனிதர்கள்.
  • இருக்கோ இல்லையோ., ஏதோ ஒரு சாமிக்கு பயப்பட்டு மன சாட்சியுடன் நடக்கும் குடிமக்கள்.

அனைத்தையும் மாற்ற வேண்டும். உடனடியாக முடியாவிட்டாலும் ஒரு ௧௦(10) வருடத்தில் மாற்ற வேண்டும்.

என் இந்த என்ணம் ஒரு பேராசையாகக் கூட இருக்கலாம்.

இவை அனைத்தும் மாற வேண்டும், இந்த பட்டியலில் இல்லாத பல முக்கிய அம்சங்களும் நிகழ வேண்டும்…

எனக்கு எங்கே இருந்து ஆரம்பிப்பது என மிகவும் குழப்பமாக உள்ளது.

அரசாங்கம் என்பது பெருவாரியான மக்களின் பிரதிபலிப்பு மட்டுமே. ௬௦% (60%) மக்களுக்கு எது முக்கியம் என படுகிறதோ அதைத்தான் இந்த அரசு செய்யும்.

எவன் செத்தாலும் பரவா இல்லை என் வீட்டில் மின்விசிறி சுழல வேண்டும். நானே நாளை செத்தாலும் பரவா இல்லை., இன்று எனக்கு மின் விசிறி வேண்டும்.

நாட்டில் கோடி பேர் பட்டினி.., பரவா இல்லை எனக்கு நியூற்ரினோ ஆராய்ச்சி மையம் தான் வேணும்.

என் மாமியாரை கொண்ட இனம் நண்பன். என் கணவனை கொண்ட இனம் பரம விரோதி.

இந்த நாட்டை  மூன்று C  அழித்துக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட், சினிமா, சாதி. இவற்றின் மீது மோகம் கொண்டு அடிமையாய் கோடிக்கணக்கான இளம் சமுதாயம் மழுங்கிக்கொண்டு இருக்கிறது. அரிதான ஒரு சில சினிமாவை தவிர அனைத்தும் பல சூரர்களை நாம் முன் ௧௦௦ (100)  பேணர்களில் நிறுத்தியுள்ளது.

அற்புதமான தன் உடலையே சிதைக்கும் மது குடிக்கும் கூட்டமும், புகைக்கும் கூட்டமும் பிற மனிதர்களைப் பற்றி கவலை இல்லாது, சுடுகாட்டிற்கு தட்கல் முறையில் இட முன்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கட்டுகாட்டாக பணத்தை அடைவது பிறவிப் பயனை அடைவது என தவறாக நினைக்கும் பல மனிதர்கள்.

கோவில்களில் இறைவனையும் ஆன்மீகத்தையும் சூட்சமாக இருப்பதை அறியாத மூடர்களாக கோவில் செல்லும் மக்கள். கோவிலில் கடவுளை உணர்ந்தால் கூட இந்த பரபரப்பு இருக்குமா என தெரியவில்லை, பொக்கிஸம் இருக்கிறதாம்.. உடனே அனைவரும் அனைத்து கோவில்களையும் பெயர்த்துப் பார்க்க துடிக்கிண்றனர்.

கடவுள் என்பது ஒரு சிலையோ, கதையோ, வழிபாடு முறையோ அல்ல, அது உன்னை உன்னுள்  உணர்வது எனும் உண்மை என்பதை உணர்த்தும் கோவிலில் உள்ள அழகிய பிற சிற்பங்களாயாவது ரசிக்கும் ஒரு சராசரி மனிதனாககவாவது இருங்கள் பக்த பெரு மக்களே.

புரட்சிகளும் போராட்டங்களும் நகை கடை விளம்பரங்களில் வந்தால் தான் அரசாங்கதிற்கு பிடிக்கிறது.

எனக்கு ஒன்று புரிந்துவிட்டது., மாற்ற வேண்டியது அரசாங்கத்தை அல்ல., மக்களை…

மக்களின் அறிவு மேம்படாமல் இங்கே எதுவும் மாறாது.  இடது கையில் வோட்டு போட மை வைக்கும் போது வலது கையில் பிரியாணி வாசம் வந்துகொண்டிருந்தால் எதுவும் மாறாது.

உன்னை இவ்ளோ செலவு செஞ்சு படிக்க வைத்தேன் என பெற்றோர் புலம்ப புலம்ப அவர்களின் பிள்ளைகள் பிச்சை (லஞ்சம்) எடுத்தாவது அந்தக் காசை மீட்க முயல்வர்.

நடிக்கணுக்கு பாலால் அபிஸெகம் செய்யும் ஒவ்வொருவனும் கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்.

உன் தாய் தந்தையின் பிறந்த தேதி தெரியுமா உங்களுக்கு? உங்கள் வீட்டின் ஒரு மாத செலவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

சோறு இருக்கோ இல்லையோ, Score பார்க்கத் துடிக்கும் ரசிகர் மக்களே., இந்தியா இந்தியா என மூச்சுக்கு மூனூறு முறை சொல்கிறீர்களே., உங்களின் இந்திய ராணுவம் இந்திய மக்களின் மீது நடத்தும் வன்முறைகள் பற்றித் தெரியுமா?

தன் வயிற்றில் சோறு அல்லது மது இருக்க வேண்டும், பார்க்க கிரிக்கெட் அல்லது சினிமா, பொழுது போகவில்லை என்றால் சாதி, மதம், மொழி, இன, அரசியல் பேச வேண்டும்… இவை அனைத்தும் இருக்க எப்படியாவது பணமும் அதிகாரமும் இருக்க வேண்டும்.  இவற்றை மட்டுமே செய்யும் மக்கள் தான் இன்று நம் நாட்டில் அதிகமாக உள்ளனர். இவர்களில் சிலர் தான் இன்று அரசு, காவல்துறை, ராணுவம், அரசியல்வாதி, அடியாள்….

மக்களை மாற்றாமல் நாட்டில் எதையும் மாற்ற முடியாது…. எனது பல நாள் மன உளைச்சலில் நான் கண்டறிந்த உண்மை இது தான்..

இத்தனை கோடி மக்களை நான் மாற்றுவது சாத்தியமா என்பது தெரியவில்லை… அதை செய்வதால் எனக்கு தனிப்பட்ட பலன் ஏதும் இல்லை.  எனக்கு பலன் இருந்தால் தான் எதுவும் செய்வேன் எனச் சொல்லும் இனத்தில் இருந்து வந்தவனில்லை நான்.

எனது சொந்த அலுவல்கள் மற்றும் குடும்ப பொறுப்புகள் போல், இதற்கும் நேரம் ஒதுக்கி இவற்றையும் பாதிக்காத வண்ணம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.

என் போன்ற கருத்துடைய சக மனிதர்கள் இருந்தால் அவர்களின் ஆலோசனையைக் கேட்கவும் தயாராக உள்ளேன்.

You might also like

Comments are closed.