Google சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க
1,906 total views
Google பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. Blogger, GMail, YouTube, FeedBurner என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் open செய்ய வேண்டும். Google-ன் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு click செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும் Google-ன் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL type செய்ய வேண்டிய அவசியமில்லை.
நீட்சியின் பயன்கள்:
- ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி உபயோகிக்கும் Google சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே click-ல் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
- உங்களுக்கு எத்தனை Google சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
- எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் GMail மற்றும் Blogger-ல் share செய்யும் வசதி.
- Google சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
- GMail மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த https://chrome.google.com/webstore/detail/denbapicipbiplggmfebiogiphopgjca நீட்சியை download செய்து chrome உலவியில் install செய்து கொண்ட பிறகு chrome-ல் தோன்றும் அந்த ஐகானை click செய்தால் Google சேவைகள் வரும். அதில் நிறைய Google சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை click செய்யுங்கள். கீழே இருப்பதை போல window வரும். அதில் Services என்பதை clik செய்யுங்கள்.
அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை click செய்தால் வரும். Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.
Comments are closed.