Speech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வந்து ஆச்சர்யாமூட்டும் சீன நிறுவனம்:

915

 2,077 total views

                        பல மென்பொருள் நிறுவனங்களும்  பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தொழில்நுட்பங்களுள் ஒன்று “பேச்சு புரிந்துணர்வு தொழில்நுட்பமாகும் “(Speech Recognition ).

கூகுள் , ஆப்பிள், அமேசான்,மைக்ரோசாப்ட் உட்பட அமெரிக்காவில் மட்டும் 26 மென்பொருள் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய மென் பொருட்கள் வெளியிட்டு வருகின்றன . பேச்சு கட்டளைகள் மூலம் இணையத்தில் தேடும் வசதி நம் ஆன்டிராய்டு கைபேசி , ஐபோன் கைபேசியில் Siri, மைக்ரோசாப்ட்டின்  கார்டானா போன்றவற்றில்  உள்ளதை நாம் அறிவோம். உண்மையில் ஆங்கிலம் தவிர வேறு அனைத்து மொழிகளிலும் கணினியில் தட்டச்சு செய்வது கடினமாகத்தான் உள்ளது. ஆங்கிலத்தில்  26 எழுத்துக்கள் ஆனால் ஆசியாவில் உள்ள ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் ஆனால் ஆசியாவில் உள்ள மொழிகளில் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் இணைய வெளியில் தேட அவரவர் மொழியில் பேச்சு கட்டளைகளின் மூலம் தேடுவது மிகவும் எளிதாக இருக்கும். இணையவழி தேடுதல் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் கூகுள் நிறுவனத்தின் இதயத் துடிப்பு   போன்றது. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தில்   அக்கறையுடன் செயல்பட்டு வரும்   கூகுள் நிறுவனத்திற்கு  ஆசியாவில் போட்டியாக சீனாவின் பெய்டு (Baidu) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகிறது.
download (2)
சீனாவின் கூகுள் “பெய்டு”:
அரசு விதிகளுக்கு உட்பட்டு கூகுள் நிறுவனம் செயல்பட  ஐரோப்பிய யூனியனில்  இருந்து சட்ட ரீதியான அழுத்தம் வந்தது போல , சீன அரசு கூகுள் நிறுவனத்திற்கு ஆறு ஆண்டுகள் தடை விதித்திருந்தது. இந்த காலகட்டத்தில் சீனர்களின் நம்பிக்கைக்குரிய இணைய தேடு பொறியாகத்  (internet Search Engine) திகழ்வது  பெய்டு (Baidu.com ).
தற்போது Deep Speech 2 எனும் பேச்சு கட்டளை தொழிநுட்பத்தை வெளியிட்டுள்ளது. அதுவும் பிற தன்னாற்வ  கணினி வல்லுனர்கள் அதன் மூல நிரலை (Source Code) பார்வையிட வசதியாக Git Hub தளத்தில் பதிவேற்றியுள்ளது .  ஏற்கனவே கூகுள் தனது பேச்சு கட்டளை நிரலையும் இவ்வாறே வெளியிட்டிருந்தது  நினைவிருக்கலாம்.
Deep Speech 2 வின் மூன்று சிறப்பம்சங்கள்:
   1.பேச்சு கட்டளைகளை புரிந்து கொள்வதில் 3.7% பிழைகள் மட்டுமே ஏற்படுவதாக பெய்டு தெரிவித்துள்ளது.ஆனால் தனது மென்பொருளில் 8% பிழைகள் உள்ளதாக கடந்த வருடம் கூகுள் தெரிவித்திருந்தது.
2.”Hybrid Speech ” கலப்பு பேச்சு, அதாவது சீனர்களின் தாய் மொழியான மாண்டரின் மொழி வார்த்தைகளுடன் ஆங்கில வார்த்தைகளையும்  சேர்த்து பேசினாலும் புரிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.AI எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை விரைவில்  பெய்டு  அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கு மக்களுடன் உரையாட Deep Speech 2 ன் பங்கு அதிகமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
   சீனம்-ஆங்கிலம் எந்திரமொழி  எனும் அடுக்கில் தான் இந்த மென்பொருள் செயல்படும் கூகுள் நிறுவனத்தை விட  மிகச் சிறிய நிறுவனமான பெய்டு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு  ஆசியாவில் இருந்து அமெரிக்க தளத்தில் மென்பொருள் கொண்டு வந்துள்ளது  அதன் முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும்  மகிழ்வான செய்தியாகும்.
                                                                                                                                                                           இப்படிக்கு
                                                                                                                                                                             கார்த்திகேயன்

You might also like

Comments are closed.