கூகுளின் “Project Tango ” ஆராய்ச்சி : வீடியோ காட்சி வெளியீடு

663

 1,284 total views

      கூகுள்  நிறுவனம் கடந்த மூன்று வருடமாக “Tango “ என்று கூறப்படுகின்ற ஒரு திட்டத்தில் செயலாற்றி வந்ததுஅனைவரும்  அறிந்ததே. இந்த திட்டம் இதுவரை சோதனை களத்திலேயே உள்ளது.
“Project Tango ” :
                Project Tango ”  என்பது  3டி சென்சார்  பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ள ஒரு மொபைல்  சாதனமாகும். இந்த சாதனத்தில் பின் பகுதியில் இரண்டு காமிராக்களும் கூடவே ஒரு அகச்சிவப்பு உணர்த்திகளும் பொருத்தப்பட்டிருக்கும். மற்றும் இதிலுள்ள மென்பொருள்கள்  மேம்பட்ட தரத்துடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் . இதனால் புகைப்படங்கள் முப்பரிமான முறையில் எடுக்கப்படும் மற்றும் கதவுகள் ,ஜன்னல், அலமாரிகள் போன்ற பொருட்களின் அளவீடுகளை அளந்தறியக் கூடியது. மேலும்  இதில் சில வகை சென்சார்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக அளவு  பேட்டரி சக்தி தேவைப்படும். இதிலுள்ள சில குறைகளை களைந்து துல்லியமான அளவீட்டிற்கு ஏற்ற ஒரு சாதனமாக உருவாக்கும்முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. தற்போது இதன் ஆராய்ச்சி திட்டத்திலுள்ள இந்த சாதனத்தினை Project Tango-வின் அதிகாரி முன்னோட்ட காட்சியினை வெளியிட்டுள்ளார். இவர் இதற்கு முன்   மைக்ரோசாப்ட்  நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இத்தகைய  போன்,   எப்போது  வாடிக்கையாளரை சேரும் என்று குறிப்பிடப்படவில்லை.

You might also like

Comments are closed.