2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன ?
673 total views
மக்கள் குறுந்தகவல்கள் அனுப்பும்போது சாதரணமாக செய்திகளை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது அனைவரும் அறிந்ததே! காலம் செல்ல செல்ல முகபாவனைகளை வெளிப்படுத்தக் கூடிய இமோஜிக்களை பயன்படுத்தினர் என்றாலும் 2015-இல் தான் இமோஜிக்கள் அதிகம் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக இமோஜிக்களை ஆப்பிள் நிறுவனம் விசைபலகைகளில் புகுத்தியது, முகநூலில் இமோஜிக்களை புகுத்தியது, மற்றும் கூடுதலான இமோஜிக்களை உருவாக்கி அதனை அன்ராய்டு மற்றும் ios பயனர்கள் அனைவரும் அணுகும்படி செய்தது, மேலும் சோனி பிக்சர் அனிமேசனில் இமோஜிக்களை கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அறிவிப்பை ஜூலையில் வெளியிட்டிருந்தது,தேடுபொறிகளில் புகுத்தியதுபோன்றவற்றில் இமோஜிக்கள் பங்கு இருப்பினும் இவையனைத்திற்கும் மேலாக இமோஜிக்கள் இந்த வருடத்தின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் குறிப்பிடத்தக்க விஷயம் .
இமோஜிக்கள் குறுகிய காலத்தில் இவ்வளவு பிரபலமடைய காரணம் என்ன ?
1990களிலிருந்து இமோஜிக்கள் இருப்பினும் 2015இல் கலந்துரையாடல்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பல வார்த்தைகளைப் எழுதி புரிய வைக்க முடியாத சில தருணங்களை ஒரு இமோஜி வெளிப்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.மேலும் ஒருவரின் பேச்சிற்கு ஒருவர் சிரிப்பதையும் அழுவதையும் அவரே கூறுவதை விட அழுகும் இமோஜியையோ அல்லது சிரிக்கும் இமோஜியையோ அனுப்புவதன் மூலம் வெகு விரைவில் நம் எண்ணங்களை வெளிப்படுத்திவிடலாம்.இந்த இமோஜிக்களுக்கு மொழிகள் அவசியமில்லை என்பதால் மொழி என்பது பெரிய இடர்பாடாக அல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Comments are closed.