657 total views

2017 இல் அறிமுகபடுத்தவிருக்கும் இந்த கார் ஒரு முழுமையான தானியங்கு காராக இல்லாவிடிலும் ஆனால் அதன் சிறிய திசைமாற்று உள்ளீடுகள் வழியாக 80 மைல் தொலைவுகள் வரை கட்டுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு மேன்மை வாய்ந்தது.இதிலுள்ள பைலட் உதவுதல் தொழில்நுட்பத்தின் காரணமாக காரினை மிக கடினமான மற்றும் ஆபத்தான சோதனைகளுக்கு உட்படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. தூரத்தில் சாலையில் நடமாடும் விலங்குகளை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கண்டறிய உதவுகிறது. வால்வோ S90 சில ஆண்டுகளில் சந்தைக்கு வரும் போது கலப்பின பவர்டிரெய்ன் XC90 எஸ்யூவி மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வால்வோ அனேகமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டெட்ராய்டு வாகன கண்காட்சியில் S90 தானியங்கு கார் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளிபடுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. முழுமையான தானியங்கு காரினை சாலைகளில் காண்பதற்கு முன் வால்வோ பாதி தானியங்கு கார்களை முதலில் வெளியிடுவது அதன் வியாபார யுக்தியைக் காட்டுவதாகவே உள்ளது. இதனால் மக்கள் ஒரு முழுமையான தானியங்கு வாகனம் சந்தைக்கு வரும்போது எந்தவித அச்சமுமின்றி வாகனங்களை பயன்படுத்துவர்.
Comments are closed.