2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற பட்டத்தை வென்ற ஈமோஜி :

461

 702 total views

ஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்போர்டு அகராதி சிறந்த வாரத்தைகளை தேர்ந்தேடுத்து வெளியிடும் அந்த வகையில்  தற்போது  ஆனந்தக்  கண்ணீருடன் உள்ள ஈமோஜியை 2015இல்  சிறந்த வார்த்தையாக  அறிமுகபடுத்தியுள்ளது. எப்போதும் வார்த்தைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அகராதி வரிசையில்  ஈமோஜியை  தேர்ந்தேடுத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

screen-shot-2015-11-16-at-2-22-18-pm

ஆக்ஸ்போர்ட் திங்களன்று 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த அகராதியை வெளியிட்டது. அதில் புதுவிதமாக யாரும் எதிர்பாராத விதமாக இமோஜியை புகுத்தியிருந்தது. இந்த ஆனந்தக் கண்ணீருடன் உள்ள முகபாவனையை 2015ல் அதிகமாக பயன்படுத்தும் முகபாவனையாகும் .

ஏன் ஈமோஜி ?

ஈமோஜிகள் 1990களில் இருந்து நம்மைச் சுற்றி வருகின்றன .தற்போது 2015ல் ஈமோஜிக்கள் மிதமிஞ்சிய வளர்ச்சியைக் கொண்டுள்ளன . மற்றும் ஈமோஜி என்ற வார்த்தையையும் கூட அதிகமாக உபயோகபடுத்தி வருகின்றனர். மேலும் இந்த வருடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சுவிப்ட்-கீ யும் கூட்டு சேர்ந்து உலகில் பல பிரபலமான ஈமோஜியினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதே.

இந்த  ஈமோஜியினை 20 சதவிகிதம் லண்டனிலும் 17 சதவிகிதம் அமெரிக்காவிலும் பயன்படுத்துகின்றனர் என்ற சுவிப்டு கீ யின் அறிவிப்பின் படியே  ஆனந்தக் கண்ணீர் ஈமோஜியை 2015-இல் சிறந்த வார்த்தையாக தேர்ந்தெடுக்க காரணமமாகும்.

emoji-frequency

மேலும் 1997 இல் வந்த இதன் வளர்ச்சி பயன்பாடு தற்போது மூன்று மடங்கு அதிரித்துள்ளது. தற்போது ஈமோஜிக்கள் குறிப்பாக முகநூல், யூ-டியூபில் இளம் வயதினரால் அதிகமாக கவரப்பட்டும் பயன்படுத்தப்படும் வருகிறது.இதனால் தகவல் தொடர்பு என்பது வார்த்தைகளின் வழி மட்டுமல்லாமல் இது மாதிரியான புதுவழிகளிலும் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

You might also like

Comments are closed.