1,041 total views
தகவல் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இரண்டும் வயர்லஸ் வாணிகத்தில் கைகோர்க்க உள்ள தகவலை ரிலையன்ஸிற்கு சொந்தக்காரரான திரு அம்பானி அவர்கள் அறிவித்துள்ளார். தற்போது இந்நிறுவனம் ஏர்செலுடன் 90நாட்கள் கால அவகாசத்துடன் ஏர்செல்லின் பெரும்பான்மை உரிமையாளரான மலேஷியா நாட்டின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மற்றொரு பங்குதாரரான சிந்தியா செக்யுரிட்டி அண்டு இன்வஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ள ஒப்பந்தம் பற்றிய தகவலை அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரிய மொபைல் போன் தளத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே MTS தர அடையாளத்தின் அடிப்படையின் கீழ் சிஸ்டெமா ஷியாம் டெலி சர்வீசஸ் என்ற இந்திய மொபைல் தொலைபேசி வணிகத்தையும் வாங்கும் செயல்முறையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல், மற்றும் MTS உடன் இணைந்து தயாரிக்கும் இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மொத்தம் 19.3% அளவிலான நிறமாலை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரங்கள் அனைத்தும் 800 மெகா ஹெர்ட்ஸ் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ் போன்றவற்றிற்கு – – 2G, 3G மற்றும் 4G போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. ஏர்செல் இதுபோன்று செல்லுலார் கோபுரங்களை வாடகைக்கு விடுவதால் இந்த பணத்தைக் கொண்டு அதன் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என நம்பியுள்ளது.
இதுபோன்ற வணிகத்தை விற்கும் ஒப்பந்தத்தில் இணைந்தால் ரிலையன்ஸ் அதற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை கணிசமாக சமாளிக்க முடியும் என மூடிஸ் இன்வஸ்ட்டர் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்வஸ்ட்டர் சேவை என்பது 130 நாடுகளுக்கும் மேலாக உள்ள முன்னணி நிருவனங்களின் கடன் , முதலீடு மற்றும் பங்கு சந்தை நிலவரம் போன்றவற்றை ஆராய்ந்து அளவிடக் கூடிய நிறுவனமாகும்.
டிசம்பர் 4 தேதி இந்நிறுவனத்தின் செல்லுலார் கோபுரங்களை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டில்மேன் ஹோல்டிங்க்ஸ் மற்றும் டிபிஜி ஆசியா நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு ரூ.30,000 கோடியாகும். இது நிறுவனத்தின் மொத்த கடன் அளவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காக சொத்துக்களை விற்று பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஆர்-காம் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டில்மேன் ஹோல்டிங்க்ஸ் மற்றும் டிபிஜி ஆசியா நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு ரூ.30,000 கோடியாகும்.
இதேபோன்று இந்தியா முழுவதுமுள்ள 39,894 செல்லுலார் கோபுரங்களை மற்ற நிறுவனங்களுக்கு குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விற்றால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதன் மீதமுள்ள இருப்புநிலை கடனை குறைக்க ஏதுவாக இருக்கும் என மோடிஸ் சேவை மையம் தெரிவித்துள்ளது.தேவைக்கு அதிகமாக உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் விற்பனை செய்து பணமாக்கும் திட்டத்தின் தொடக்கமாக இந்த விற்பனை அமைந்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை, கடன்களை திரும்ப செலுத்தும் பொறுப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
Comments are closed.