ஓபன் சோர்ஸ் , இது இலவசம் மட்டும் அல்ல வரம்
1,868 total views
மென்பொருள் (software) மக்களை பயமுறுத்தும் ஒன்று காரணம் இதனின் விலை. ஆனால் பலருக்கு தெரியாத ஒன்று ஓபன் சோர்ஸ் (open Source ). நம் இந்தியாவில் நாம் உபயோகிக்கும் பல மென்பொருள்கள் திருட்டுதனமானவை. ஏன் நீங்கள் உபயோகப்படுத்தும் ஆபரேடிங் சிஸ்டம் (operating system windows xp, vista , windows 7) மற்றும் உங்கள் கணினியில் இருக்கும் Microsoft நிருவனத்தின் microsoft office கூட முறைப்படி வாங்கததாக இருக்கலாம். ஆனால் ஓபன் சோர்ஸ் உபயோகிப்பதில் இந்த சிக்கல் இல்லை மேலும் இதில் நிறைய பயன்களும் உண்டு சில சிக்கல்களும் உண்டு.
எதற்காக ஓபன் சோர்ஸ்
“எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” இது தான் ஓபன் சோர்ஸ்ன் அடிப்படை நியதி.
- மென்பொருளுக்காக உங்கள் பணத்தை செலவிட தேவை இல்லை.
- உங்களுக்கு தகுந்தார் போல் மென்பொருளையே மாற்றி அமைக்கலாம் ( மாற்ற தெரிந்தால் ).
- இந்த இரண்டு மட்டுமே ஓபன் சோர்ஸ்ன் முக்கிய அம்சங்களாகும்.
எதற்கு எல்லாம் ஓபன் சோர்ஸ் கிடைக்கும்
தற்போதைய சூழலில் அனைத்துமே ஓபன் சோர்சாக மாறி வருகிறது. இப்பொழுது அனைவராலும் அறியப்படும் புது தொழில்நுட்பம் Android, தொலைபேசிகள் உபயோகப்படுத்தும் மென்பொருளாகும் இதுவும் ஒரு Open Source மென்பொருள் தான். எல்லாவற்றிற்குமே ஓபன் சோர்ஸ் மென்பொருள்கள் உள்ளது.
சில உதாரணங்களை இப்பொழுது பார்க்கலாம்
Commercial Software Open Source Freeware
Microsoft Office ==== Open Office
Adope Photoshop ==== Gimp
இன்னும் பல ஓபன் சோர்ஸ் மென்பொருள் பற்றிய தகவல்கள் இனி வரும் பதிவுகளில் கொடுக்க போகிறோம்
Comments are closed.