ஊக்கத் தொகையுடன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வாய்ப்பு

213

 572 total views,  6 views today

மதுரை:மதுரை பெட்கிராட்டில் மத்திய அரசு ஊக்கத் தொகை மற்றும் வேலைவாய்ப்புடன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.கம்ப்யூட்டர் பயிற்சியுடன் வாடிக்கையாளர் சந்திப்பு, வரவேற்பாளர் மற்றும் அலுவலக நிர்வாகம் முதலான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படும். ஊக்கத் தொகை ரூ.இரண்டாயிரம் வழங்கப்படும். பணியில் சேர்ந்து பணிபுரிய விரும்புவோர் மட்டும் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், ஆறு போட்டோவுடன் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாச்சல தெருவிலுள்ள பெட்கிராட் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0452-260 0005, 260 7760, 260 3655 போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : தினமலர்

உங்களுக்கு தெரிந்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இதை தெரிவித்து பயன் பெற செய்யவும்.

You might also like

Comments are closed.