ஓப்ரா மேக்ஸின் உதவியுடன் 50 சதவிகித டேட்டாவை இணையத்தில் சேமியுங்கள் !

97

நீங்கள் இசைப்  பிரியரா? இசையை எப்போதும் இணையத்தில் இடைவெளியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஓப்ரா மேக்சும் கண்டிப்பாக பிடிக்கும்.  ஆம்    அடிக்கடி  நமக்கு பிடித்த  இசையை கேட்பதனால் டேட்டாக்கள்  வீணடிக்கப்படுகின்றன.மேலும்   சில நேரங்களில் தீர்ந்தும் விடுகின்றன.இதற்காகவே இசை  சம்மந்தப்பட்ட பயன்பாடுகளிலிருந்து  உங்கள்  டேட்டாவைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டது தான் ஓப்ரா மேக்ஸ்.  உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தி சேமிக்குமாறு உருவாக்கப்பட்ட பயன்பாட்டில்   உலகில் இதுவே முதல் முறையாகும்.

 தரவு மேலாண்மை (டேட்டா மேனேஜ்ன்மன்ட்) மற்றும் தரவு சேமிப்பு பயன்பாடுள் (டேட்டா சேவிங் ஆப்) இணைந்து இசை பயன்பாடுகளான யுடியுப் சேவை, பண்ட்ரோ, ஸ்லாக்கர் ரேடியோ, கானா, சாவன் போன்றவற்றில் தரவுகளை 50% குறைக்கிறது.இந்த ஓப்ரா மேக்ஸ் ஆடியோ தேர்வுமுறையைக் கையாண்டுள்ளது. இதனால் வீடியோ மற்றும் ஆடியோ ஸ்பீரிமிங் போக்குவரத்துகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் இது MP3 மற்றும் MP4 போன்ற இரண்டிற்கும் ஆதரவளிக்கிறது . தற்போது இதோடு ஆடியோ கம்ப்ரசன் அம்சங்களையும் சேர்ந்துள்ளது . இது குறிப்பாக  லிமிடட் டேட்டா பிளான்களை மட்டும் கொண்ட  பயனர்களுக்கு சிறந்ததே!
 இந்த பயன்பாட்டின் மூலம்  பயனர்களின்   ஒரு மாத காலம்  அல்லது தினசரி அடிப்படையில்  மொபைல் இணையம்  அல்லது வை -பையில்  அவர்கள் பயன்படுத்திய   தரவு திட்டங்களை   கண்காணித்து  டேட்டாக்களை எப்படி சேமிப்பது  போன்ற சிறந்த கட்டுப்பாட்டை கொடுத்து தரவுகளை மிச்சப்படுத்துகிறது .
 ஓப்ரா மேக்ஸினை  தற்போது அன்ட்ராய்டு 4.0 பதிப்பினைக் கொண்டவர்களுக்கும் அதற்கு மேலான பதிப்பினைக்  கொண்டவர்களுக்கும் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி  செய்யப்படுள்ளது .

You might also like