ஜிமெயிலின் வசதி – Preview Pane

901

 1,598 total views

ஜிமெயில் Preview Pane பற்றிய ஒரு செய்தி. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும். உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை click செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள windowவில் படிக்கலாம். அங்கிருந்தே அந்த மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பலாம், மின்னஞ்சல்களை அழிக்கலாம்.

இந்த வசதியை பெற:

1. முதலில் http://mail.google.com/mail/#settings/labs  சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும்.

2. பிறகு அந்த gadget-ல் Enable என்பதை தேர்வு செய்து Save Changes என்னும் பட்டனை click செய்யவும்.


3. பிறகு உங்களுக்கு புது window தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது click செய்தால் அது வலது புறம் தெரியும்.

அவ்வளவு தான், இனி மின்னஞ்சலை Preview பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால் மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை click செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில் Drop Down Arrow-வை click செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.

No Split – Preview windowஇல்லாமல் சாதாரணமாக பார்க்க.

Vertical Split – வலது புறம் Preview பார்க்க.

Horizontal Split – கீழே Preview பார்க்க.

 

You might also like

Comments are closed.