Delete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது?

705

 1,393 total views

Google Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற மிகவும் சிரமப்பட  வேண்டி இருக்கும்.  சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு GMail நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள contact list மொத்தமாக delete செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்துவிடலாம். ஆனால் நீங்கள் delete செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் GMail Accountல் நுழைந்து கொள்ளுங்கள். Contact என்பதை click செய்யுங்கள்.

  • படத்தில் காட்டியுள்ளதைப் போல Contacts click செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும் அதில் More Actions என்பதை click செய்யுங்கள்.

  • அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை click செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த window open ஆகும்.

  • இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் delete செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்பக் கொண்டு வரமுடியும்
  • நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.
  • நீங்கள் உங்கள் contact list அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம்.

 

You might also like

Comments are closed.