கூகுளின் புதிய வசதி “Account Activity”

129

 649 total views,  1 views today

கூகுள் நிறுவனம் பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி வருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவுடன் இன்னும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகுள் வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளில் Account Activity என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.

 இதனால் என்ன பயன் என்று கேட்கின்றீர்களா?  நீங்கள் ஒரு மாதத்தில் கூகுள் தயாரிப்புகளை எத்தனை முறை உபயோகித்து உள்ளீர்கள் எதற்காக உபயோகப்படுத்தி உள்ளீர்கள், ஒரு மாதத்தில் எத்தனை மெயில் உங்களுக்கு வந்துள்ளது, எத்தனை மெயில் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்ற முழு அறிக்கையையும் பார்க்க உதவுவது தான் Account Activity என்ற புதிய வசதி. இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என பார்ப்போம்.


Account Activity வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:

  • முதலில் Google + தளத்தை திறந்து Account Settings ==> Products ==> Go to Account Activity என்பதை click செய்யவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் Opt in என்ற button click செய்யவும்.

  • Opt in button அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும். அதிகபட்சமாக இரண்டு நிமிடத்தில் உங்கள் அறிக்கை தயாராகிவிடும். இதனை உறுதிப்படுத்த உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள்.
  • அந்த மெயிலில் உள்ள link-ன் மூலமாகவோ அல்லது Google Plus ==> Account Settings ==> Products ==> Go to Account Activity என்ற இடத்திற்கு சென்று உங்களுடைய ஒரு மாத அறிக்கையை பார்த்து கொள்ளலாம்.
இனி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தயாரானவுடன் உங்களுக்கு தானாகவே ஈமெயில் வந்து விடும்.
  • குறிப்பு : Web History disable செய்து வைத்து இருந்தால் நீங்கள் தேடிய எண்ணிக்கைகள் இதில் காட்டாது.

You might also like

Comments are closed.