உங்களது கடவுச்சொற்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள சிறிய மென்பொருள்

187

 902 total views,  1 views today

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச் சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.

இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது. இதில் உங்களது அனைத்து கடவுச் சொல்லையும் சேமித்து வைத்து இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. எந்தவொரு நபரும் உங்களது கடவுச் சொல்லை திருடாத படி கடினமான கடவுச்சொல் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

2. குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த கடவுச் சொல்லாக தெரிவு செய்யும் வசதி.

3. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித் தனியான கடவுச் சொல் கொடுத்து சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.

4. Potable மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை open செய்யுங்கள். அதன் பின் தோன்றும் window-வில் அதில் உள்ள New என்ற button அழுத்தவும்.

அதன் பின் தோன்றும் window-வில் உங்களின் Master password தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன்பின் வரும் window-வில் உங்களின் password வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற button அழுத்தி உங்கள் password சேமித்து கொள்ளலாம். இதே முறையில் உங்களையுடைய அனைத்து கடவுச் சொற்களையும் சேமித்து கொள்ளுங்கள்.

இதற்கு Tools – password generate சென்று கடினமான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் கடவுச் சொல் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய – http://download.cnet.com/KeyPass/3000-2092_4-10327427.html

You might also like

Comments are closed.