2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo 5G சேவை

686

 653 total views

அண்மையில், தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்டு 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பயணம் செய்யும் போது செல்போன்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது gogo Inflight Internet Company விமான சேவைகளுக்கான முன்னணி உலகளாவிய வழங்குனராக விமானத்தை இணையத்துடன் இணைக்க மற்றும் மென்பொருள் மற்றும் தளங்களில் உருவாக்க 2021 ஆண்டில் விமான சேவைக்கான 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

GOGO வின் அறிவிப்பு படிமுதலில் சிறிய விமானங்களுக்கு அதிவேக தரவு சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.புதிய 5G நெட்வொர்க் ஆரம்பத்தில் ஒரு தனியுரிம modem மற்றும் உரிமமற்ற 2.4GHz spectrum கொண்டது. ஏற்கனவே இருக்கும் 250 tower உள்கட்டமைப்பு உடன் 5G தரவு வேகம் மற்றும் இடைவெளியை ஆதரிக்க  மேம்படுத்தப்படும்.மேலும்,பயணிகள், 5 ஜி தரவு Wi-Fi இணைப்புகளால் அணுகக்கூடியதாக இருக்கும், இது விமானம் அனுப்பும் மற்றும் செல்லுலார் சமிக்ஞைகள் பெறும் போது, ​​பயணிகள் Wi-Fi ஐப் பயன்படுத்தி Gogo சேவையில் உள்நுழைவார்கள்.செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் 5G சேவையை தற்போது Gogo குறைந்த செலவில் கொடுக்கும்.

You might also like

Comments are closed.