பெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்

797

 673 total views

சுவீடனின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் பெங்களூரில் தனது Global Artificial Intelligence Accelerator (GAIA) அமைக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஆய்வகம் போன்று இந்தியாவிலும் அமைய உள்ளது. மூன்று ஆய்வகத்திற்கும் சேர்த்து 300 பொறியாளர்களை பணியில் அமர்த்த உள்ளோம். பெங்களூரில் மட்டும் 150 பொறியாளர்கள் 2019ம் ஆண்டு முதல் காலாண்டில் பணியமர்த்தப்படுவார்கள் என  இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் திரு. சஞ்சீவ் தியாகி தெரிவித்துள்ளார். 


2024ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 40% பேர் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர் என்றும், இதனால் பல சிறிய செயற்கை நுண்ணறிவு சென்சார்கள் பயன்பாடு உலக அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த துறையில் தங்கள் நிறுவனம் கால்பதிக்க பல முன் முயற்சிகளை எடுத்துவருகிறோம், அதில் ஒரு கட்டமே தற்போது பெங்களூரில் அமைக்க இருக்கும் இந்த ஆய்வகம். எனவும் சஞ்சீவ் தியாகி தெரிவித்தார். 


இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பிற பெரும் நிறுவனங்கள், கல்வித்துறை நிறுவங்களுடன் கூட்டு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி GAIA பல புதிய கண்டுபிடிப்புகளை பெரும் அளவில் செய்ய இருப்பதாகவும் எரிக்சன் முடிவுசெய்துள்ளது.  

You might also like

Comments are closed.