கூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon: Breakpoint

23

ஸ்டேடியாதான் இனிமேல் ஆன்லைன் கேம்களின் எதிர்காலம் என்கிறது கூகுள். எங்கும் விளையாடலாம், எதிலும் விளையாடலாம் என்பது இதன் ஸ்பெஷல்!

ஆன்லைன் கேம்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்த கூகுள் அண்மையில் அதற்காக ஸ்டேடியா என்ற புதிய தளம் ஒன்றை அறிமுகப்படுத்திது.

தற்போது ஸ்டேடியாவில் ​​சேவைக்கு வரும் விளையாட்டுகள் The Division 2, the upcoming Ghost Recon: Breakpoint, Mortal Kombat 11, Baldur’s Gate 3 , Rage 2 ஆகியவை அடங்கும் என்று அறிவித்தது. இருப்பினும், சேவையைத் தொடங்கும்  எந்தவிதமான வெளியீட்டு தேதி வழங்கப்படவில்லை.

இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம்.

கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் இந்த வருடத்துக்குள்ளாகவே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள மற்ற பகுதிகளுக்கு எப்போது இது கிடைக்கும் என்பதைப் பற்றி கூகுள் இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஸ்டீம் போன்ற தளங்கள் இதேபோன்ற சேவைகளை அளித்துவருகின்றன. தற்போது கூகுளும் களமிறங்கியிருப்பதன் மூலம் கேமர்களுக்கு கூடுதல் ஆப்ஷன் ஒன்று கிடைத்திருக்கிறது எனலாம்.

You might also like