ஸ்கைப்பில் இல்லாதவர்களும் ஸ்கைப் உரையாடலுக்கு வரலாம்:
732 total views
ஸ்கைப் என்பது இந்த முழு உலகமும் ஒருவருக்கொருவர் இலவசமாக பார்த்துப் பேசிக்கொள்ள தொடங்கப்பட்டது. நீங்கள் எங்கிருந்தாலும் எந்த சாதனத்தை வைத்திருந்தாலும் போன் , கணினி , மடிக்கணினி, மாத்திரைகள் போன்ற அனைத்திலும் ஸ்கைப் வேலை செய்யும்.ஸ்கைப்பில் ஒருவர்கொருவரோ அல்லது குழுவினருடனோ அவர்களின் முகம் பார்த்து குரல்களை கேட்டும் பேச முயும். இருப்பினும் சில சமயங்களில் நமக்கு பிடித்தவர்களுடன் பேச நினைக்கையில் அவர்களிடம் ஸ்கைப் கணக்கு இல்லாது போவது, ஸ்கைப்பை நான் பதிவிறக்கம் செய்யவில்லை என்ற பதிலையும் கேட்பது போன்ற தடைகளை உடைத்தெரிந்து ஸ்கைப் தற்போது அதன் சேவையை மேலும் அதிகபடுத்த விரும்புகிறது.அதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பை அளித்துள்ளது. அதன்படி ஸ்கைப்பில் நாம் விரும்பிய யாரை வேண்டுமானாலும் அழைத்து பேசலாம். மேலும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் ஸ்கைப் கணக்கில் இல்லாத போதும் கூட இது சாத்தியமாகும்.
ஸ்கைப் இன்று ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.. இதன் மூலம் ஸ்கைப்பில் ஒரு யுனிக் லிங்க்கை முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ அல்லது மின்னஜ்சலிலோ பகிர்வதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இல்லாதவர்கள் கூட உரையாடலாம்.அதனால் தற்போது நீங்கள் யாருடன் பேச விரும்பினாலும் அந்த லிங்க்கை அவர்களுக்கு அனுப்பினால் போதுமானதே ! மேலும் அவர்கள் உங்கள் தொடர்பு பட்டியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர்களிடம் ஸ்கைப் கணக்கு இருக்கவோ அல்லது ஸ்கைப்பை மென்பொருளை பதிவிறக்கம் செய்யவோ அவசியமில்லை.அப்படியானால் நாம் நினைத்தவுடன் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.
https://youtu.be/Ojly8VCTLGE
ஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த லின்க்கை கிளிக் செய்து மற்ற பயனர்களையும் அழைத்து பேசலாம்.அதாவது ஸ்கைப் கணக்கில் இல்லாதவர்கள் மற்றும் ஸ்கைப்பை அன்றாய்டு போன் அல்லது ஐபோன் போன்றவற்றில் பயன்படுத்தினாலும் மேலும் அவர்கள் உங்கள் தொடர்பு பட்டியில் இல்லாத போதும் அவர்களுடன் உரையாட முடியும்.
ஒருவர் ஸ்கைப் கணக்கில் இல்லாதபோதும் அவரின் பெயரை டைப் செய்து கிளிக் செய்தால் அவருடன் உரையாடத் தொடங்கலாம்.
இந்த சிறு சிறு மாற்றங்கள் தான் ஸ்கைப்பில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் . ஆம் ஸ்கைப்பின் இந்த மாற்றத்தால் மேலும் பல பயன்ரகளிடையே ஸ்கைப் உலவும் என நம்பலாம். இது சாமானிய மனிதனும் உபயோகிக்கும் வகையில் கையாள சிறந்ததாக மாறியுள்ளது . என்பதால் இதற்கு முன்னர் ஸ்கைப்பை உபயோகபடுத்தியவர்களை விட இனி பயனர்கள் அதிகமாகலாம்.இந்த தொழில்நுட்பத்தை ஸ்கைப் இன்னும் ஓரிரு வாரங்களில் உலகிற்கு அறிமுகபடுத்த உள்ளது. அதனால் ஒரு லிங்கை மட்டும் எடுத்துக் கொண்டு உங்களுக்கு பிடித்தவருடன் ஸ்கைப்பில் பேச தயாராகுங்கள் பயனர்களே…!
Comments are closed.