மற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ :
784 total views
ஒருவரின் முகபாவனைகளை மாற்றி மற்றொரு நபருக்கு அமைக்கும் ப்ரோக்ராமை ஆராய்ச்சியாளர்கள் தற்போது செய்து வருகின்றனர். இது ஒருவரின் முகபாவனையை மற்றொருவரின் முகத்தில் பொருத்துவதேயாகும்.இது முற்றிலும் உண்மையே…! இந்த திட்டத்தில் மேக்ச்ப்ளாங் தகவலியல் நிறுவனமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக குழுவினரும் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை செப்டம்பரில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி சாத்தியமாகும்?
இந்த அணுகுமுறை ஒரு புதிதான செயற்கை வெளிப்பாடுகளை கொண்டது.அதாவது ஒரு குறிப்பிட்ட நபரின் முகபாவனைகளை மட்டும் எடுத்து மற்றொருவரின் முகத்தில் பொருத்துவதன் மூலம் இது சாத்தியமாகும்.
ஒருவரின் யதார்த்தமான முக பாவனைகளை ஒழுங்கமைவு செய்து பரிமாற்றுவதன் மூலமாக புதிதான செயற்கை வெளிப்பாடுகளை பயன்படுத்தி மற்றொரு முகத்தோடு பொருந்தும் வண்ணம் மாற்றியமைக்கிறது.RGB -D சென்சாரின் உதவியுடன் ஒருவரின் முக செயல்பாடுகளை துல்லியமாக கணித்து மற்றொரு உருவத்தினை இலக்காக கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு ப்ரேம்களிலும் முக அளவீட்டு காரணிகளான உள்ளீட்டு நிறம் மற்றும் தரவு அடையாளம் , வெளிப்பாடு, தோல் சம்மந்தப்பட்ட பிரதிபலிப்பு, மேலும் காட்சியில் லைட்டிங்கை மறுசீரமைக்கும் தன்மையும் உள்ளன.
முகபாவனைகளை பரிமாற்றும்போது ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே உள்ள தூரத்தின் அளவை கணக்கிட வேண்டும். மேலும் தேவைகேற்றார் போல அளவுருக்களை மாற்றி அமைத்தல் அவசியமே.
இதில் முக்கிய செயற்கையான மறு ஒழுங்கமைவு செய்கையில் இலக்கின் முகம் குறிப்பிட்ட வீ டியோ ஸ்ட்ரீமில் ஒத்திருக்க வேண்டும். இதற்கு கவனமான சுற்று சூழல் லைட்டிங் நிழல் மற்றும் வடிவமைப்பு என்பது தேவை. இந்த வகையான திட்டங்கள் மொழி பெயர்ப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். இது திரைப்படத்துறையில் பெரிதும் துணை புரியலாம்.கேலிச் சித்திர கதாபாத்திரங்களிலும் , குழந்தைகளுக்கு விருப்பமான கார்டூன் சித்திரங்களிலும் எதிர்காலத்தில் கலக்க வாய்ப்புள்ளது.
Comments are closed.