MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க மென்பொருள்

6,986

 14,480 total views

Adobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF (Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் இக்கோப்பு வடிவத்தில் மாற்றங்களை மற்றவர்கள் எளிதில் ஏற்படுத்த முடியாது என்பதே. அதனால் தான் பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.

ஏனைய கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும், எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது.

கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Officeன் உதவியுடன் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

1. http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=7 தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.

2. மென்பொருளை நிறுவிய பின் MS-Word Office-ஐ open செய்து Save as என்ற தெரிவினுள் செல்லும் போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு  PDF and XPS எனும் வசதி காணப்படும். இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

You might also like

Comments are closed.