இப்படித்தான் இருக்குமா ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s ?

588

 975 total views

ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் வெளியாகி 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் ஐபோன் 7 பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.கைப்பேசி ரசிகர்களுக்கு  சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக்  கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் வரும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக ஐபோன் 7- ஐ 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கைப்பேசியின் சில சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருவியில்   குறிப்பிட்ட சில அம்சங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம் என பல்வேறு கருத்துக்களை அறிவியல் வல்லுனர்கள் முன்வைத்திருக்கின்றனர். அவை ரசிகர்களின் பார்வைக்கு :

  • திரையின் அளவு7 அங்குலம் கொண்ட போன் ஐபோன் 7 என்றும், 5.5 அங்குலம் கொண்ட போன் ஐபோன் 7 ப்ளஸ் எனவும் அழைக்கப்படலாம்.
  • 3GB RAM -ஐ    நினைவகமாகக் கொண்டு அமைக்கப்படலாம்.
  • ஐபோன் 7 ,ஐபோன்6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் போன்களைப் போன்றே ஐபோன் 7 கருவியும் மெலிதாகவே இருக்கும்.
  • மின்சேமிப்பினைப் பொறுத்த வரையில் வழக்கம் போல ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியிலும் முந்தைய மாடல்களை விட சிறந்த பேட்டரிகளை வழங்கும் என்றே கூறப்படுகின்றது.
  • ஸ்லைடர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
  • யுஎஸ்பி ஆப்பிள் மேக்புக் கருவியில் இருப்பதை போன்று ஐபோன் 7 கருவியில் யுஎஸ்பி-சி போர்ட் வழங்கப்படலாம்.
  • ஐபோன் 6 கள் வலிமையான செயல்திறன் சக்தி வாய்ந்த A10 செயலியினை   பயன்படுத்த வேண்டும் என்று  எதிர்பார்க்கபடுகிறது.
  • ஆப்பிள் இரட்டை லென்ஸ்  கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள   பல்வேறு   சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 7 நீர் உட்புகவிடாத தன்மையுடன்    வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது பயன்பாட்டில்உள்ள ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ்பிளஸ் முற்றிலும் நீர்  உட்புகவிடாத  வசதியை கொண்டவை அல்ல.    அதனால் ஐபோன் 7-ல் நீரில் விழுந்ததும் ஹெட்போனின் துளைகளில்  நீர் புகா  வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த முறையானது போனை தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து காக்கிறது. எனவே விரைவில்    நீர் உட்புகவிடாத தன்மையுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐபோன் 7 ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இவ்வளவு மேம்படுத்தபட்ட நுட்பங்களுடன் கூடிய ஐபோனின் விலையும் கண்டிப்பாக மேம்படுத்தபட்டே இருக்கும் என்பது உறுதி.

 

You might also like

Comments are closed.