
713 total views
இதுவரை தானியங்கு கார், பாதி தானியங்கு கார் மற்றும் போன்ற கணினிகளின் மூலம் வாகனத்தை இயக்கும் யுக்திகள் போன்றவற்றை மட்டுமே கேள்விபட்டிருப்போம். ஆனால் சீனாவில் மனதை கட்டுப்படுத்தி அதன் மூலம் காரை இயக்கும் வித்தையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மனதின் மூலம் காரை இயக்குவது எப்படி?
வாகன ஓட்டுநரின் மூளையின் அசைவுகளை எலக்ரோ என்செபலோகிராம் என்றழைக்கப்படும் EEG-க்களை கொண்டு கட்டுபடுத்தப்படுகிறது. இதில் ஓட்டுநரினுடைய மூளையின் சைகைகளை கட்டளைகளாக மாற்றித் தருகிறது. இதற்கு ஓட்டுநருக்கு மூளையின் சைகைகளை கட்டளைகளாக மாற்றி தரும் உபகரணங்கள் தேவை. இதனால் நாம் கார் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று நினைத்தால் முன்னோக்கி நகருவதும், பின்னோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது, வாகனம் பின்னோக்கி நகருவதும், நிறுத்த வேண்டும் என நினைக்கும் போது வாகனம் நிறுத்தப்படுவது சாத்தியமாகும். இவையணைத்தும் ஓட்டுநர் தன் கைகளையோ அல்லது பாதங்களையோ பயன்படுத்தாமலே மனதால் நினைத்தாலே நிகழ்ந்து விடுவது ஆச்சரியமே!

இந்த கண்டுபிடிப்பு உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் காரினை இயக்க முடியாதவர்களுக்கு ஒரு வரப் பிராசாதமே! மனதால் கட்டுபடுத்தக்கூடிய காரினை உருவாக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த நுட்பத்தைக் கேட்ட உடனேயே மனதில் தோன்றும் கேள்வி என்னவென்றால் நாம் தேவையில்லாதவற்றையோ அல்லது வேண்டாத சமயங்களிலேயோ மனதில் தோன்றும் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டால் விபத்துகள் நிகழுமா என்பதுதான். இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்த பின்னரே மக்கள் மத்தியில் உலவ விடுவர் . எப்படி இருந்தாலும் இந்த காரை பொருத்தவரையில் மனரீதியாக கவனமுடன் இருப்பது என்பது அவசியமே !
Comments are closed.