525 total views
இதுவரை துணிகளை மட்டுமே சோப்பினை பயன்படுத்தி துவைத்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சோப்பினை பயன்படுத்தி துவைக்கும் ஸ்மார்ட் போன்களை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர் . சாதரணமாக பல மடங்கு செலவழித்து வாங்கும் மொபைல் சாதனத்தை நீரில் போட்டு விட்டால் பின் அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகி விடும் . இந்த வேலைகளை பல நேரம் வீட்டிலிருக்கும் குழந்தைகளே செய்து பார்த்திருப்போம்.மேலும் சில சமயங்களில் நமக்கே மொபைல் சாதனங்களின் மீது இருக்கும் பாக்டீரியா போன்ற அழுக்குகளை நீக்க நீரினை பயன்படுத்தி துடைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என தோன்றும் என்று நினைப்போம் .ஆனால் அப்படி செய்தால் சாதனத்தை அதன் பின் உபயோகிக்க முடியாது என்பதால் சாதனத்தை அழுக்கான தோற்றத்துடனேயே வைத்திருப்போம் . இது மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்கும் விதமாகவே ஜப்பானில் துவைக்கும் ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்த உள்ளனர் .
ஜப்பானியர்கள் தயாரித்துள்ள இந்த போனை சோப்பையும் தண்ணீரையும் கொண்டு ஒரு சாதாரண பாத்திரத்தை கழுவுவது போன்று கழுவலாம் . நீர்புகாத யுக்திகளை கொண்டே ஸ்மார்ட் போன்கள் , நொறுக்கினாலும் உடையாத டர்போ போன்கள் போன்றவைகள் சந்தையில் இருந்தாலும் சோப்பினைக் கொண்டு துவைக்கும் அம்சம் என்பது இந்த போனிற்கு மட்டுமே உள்ளது . இந்த போனின் ஆயுள் தனமையை உறுதி செய்ய இக்குழுவினர் 700 முறைக்கு மேலாக மொபைலை சோப்பினை பயன்படுத்தி துவைத்து உறுதிபடுத்தியுள்ளனர். ஒரு சில குறிப்பிட்ட வகை சோப்புகளை மட்டுமே இதில் உபயோகிக்க முடியும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளனர். இதனால் மொபைல் சாதனம் திடீரென தண்ணீரிலோ, அல்லது சாப்பாட்டிலோ விழுந்து விட்டால் சோப்பினைக் கொண்டு துவைத்து புதிது போன்று உபயோகிக்கலாம்.
Comments are closed.