வையர்லஸ் சாதனத்தின் மூலம் இரத்த அழுத்தத்தின் நிலையை ஆப்பிளின் வழியே கண்காணிக்கலாம் !

466

 628 total views

வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு   குவராடையம் நிறுவனம் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட இரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பினையும் சோதிக்கும் கருவியை ஆப்பிள் போனின் சுகாதார பயன்பாட்டின் வழியாக பரிமாற்ற வழி செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த சாதனத்தை தரப்பரிசோதனை செய்து ஐபோன்களில் உபயோகிக்க அனுமதி தந்துள்ளது.

இதனால் இந்த கருவியை உபயோகப்படுத்தி இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்புகளை மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டிலேயே  நேரடியாகவே கண்டறியலாம். கூடவே சிஸ்டோலிக் டயஸ்டோலிக் இரத்த அழுத்தங்களையும் உணரும் அம்சங்களும் இதில்  உள்ளன.    11  அவுன்ஸ் எடையை கொண்ட சாதனத்தை பயணங்களின் போதும் கூடவே எடுத்துச் செல்லலாம்.  கூடவே இதற்கு 4AAA  அளவு கொண்ட பேட்டரிகள் தேவைப்படுகின்றன.

குவராடையம் நிறுவனத்தின் இரத்த அழுத்தக்  கருவிகளை பொறுத்தவரையில் ஆப்பிள் மற்றும் ஐபோன்களுடன் இணைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.மேலும் உடல்நிலை பற்றிய தரவுகளை ஆப்பளின் சுகாதார பயன்பாட்டிற்கு அனுப்பியது இதுவே முதல்முறையாகும்.இது ஆப்பிளுக்கு புதிதானது அல்ல ஆனாலும் அதிக விலையில் விற்பனை  செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏனெனில் ஏற்கனவே  வையர்லஸ் குளுக்கோ மீட்டர்கள், இதய துடிப்பு மானிட்டர்கள் போன்றவற்றை  சின்சா மற்றும் சைவ் ஆகிய நிறுவனத்துடன்  இணைந்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதே! இதனால் பயணங்களின் போதோ அல்லது  மருத்துவமனைக்கு செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலைகளின் போதோ மக்களுக்கு   இது போன்ற கருவிகள்   நிச்சயமாக கைகொடுக்கும் .

You might also like

Comments are closed.