எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :

64

எல் ஜி நிறுவனம் அதன்  எல் ஜி-ஜி5  ஸ்மார்ட் போனின் விற்பனை விலையினை  ரூ.52290  என அறிவித்துள்ளனர் . மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கு  மட்டும் கேம் பிளஸ் சாதனம் ஒன்றினையும் இலவசமாக   பெறலாம். இந்த மொபைலின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால் இதன்  மாடுலர் அம்சமே! அதாவது மாடுலர் என்பது  பயனர் ஒருவர் அவரது  தேவைக்கேற்றவாறு மொபைல் சாதனத்தினை மாற்றிக் கொள்ள உதவும். உதாரணமாக ஒருவர் காமிரா பிக்சல்களை  அதிகபடுத்த வேண்டும்  என்று விரும்பினால் அதற்காக தனி ஒரு  பட்டனை  போனுடன் இணைத்துக் கொள்ளலாம். அல்லது பேட்டரி திறனை அதிகபடுத்த எண்ணினால் அதற்கென  தனி பட்டனை சேர்த்துக் கொண்டு பேட்டரி திறனை அதிகபடுத்திக் கொள்ளலாம். இதனால் ஒவ்வொருவரும் அவரது வசதிகளுக்கு ஏற்றவாறு மொபைலை மாற்றிக் கொள்ளலாம். எல்.ஜி க்கு சொந்தமான கடைகள், மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில்  எல் ஜி-ஜி5  ஸ்மார்ட்  போனினை  மே 30 வரை முன்பதிவுகள் செய்யலாம்  என அறிவித்துள்ளனர். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

lg_g5_back

 திரை அளவு: 5.30
தீர்மானம்: 1440×2560  பிக்சல்கள்
பேட்டரி திறன் (mAh): 2800Mah
வண்ணங்கள்: வெள்ளி, டைட்டன், கோல்டு, பிங்க்ஹார்டுவேர்
பிராசசர்: குவால்கம் ஸ்நாப்டிராகன் 820
ரேம்: 4ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32ஜிபி
பின்புற கேமரா: 16 மெகாபிக்சல்
முன் கேமரா: 8பிக்சல்
பிக்சல் பெர் இன்ச்: 554

You might also like

Comments are closed.