474 total views

நீர்புகாத தன்மையினைப் பொறுத்த வரையில் ஐபோன் 6s-களிலேயே அறிமுகபடுத்தியிருந்தது . அதில் ஒரு இரப்பர் கவர் போன்ற நுட்பத்தால் நீரை புகாமல் பார்த்துக் கொண்டாலும் ஹெட் செட்டின் துளைகளில் நீரை புகவிடாமல் வைப்பது கடினமே !
ஹெட் செட்டினைப் பொறுத்தவரையில் அதன் துளைகளில் வயர்கள் சொருகபடாமலிருப்பின் அவற்றில் நீரை புகவிடாமல் செய்வதற்கு வேறு ஏதேனும் வயர்களை சொருக வேண்டுமோ அல்லது அந்த துளையினை வேறு உலோகம் கொண்டு அடைக்கலாமா? அல்லது அந்த துளைகளில் தாற்காலிகமாக ஏதேனும் தக்கைகள் கொண்டு மூடிவிட்டு பின் தேவைப்படும்போது நீக்கி கொள்ளலாமா? போன்ற எண்ணங்களில் செயலாற்றி வருகின்றனர். ஐபோன் 6s கள் ஹைட்ரோபிக் பூச்சுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நீரை புகாத வண்ணம் செய்ததிருந்தது குரிப்பிடத்தக்கது. மேலும் இந்த அனைத்து நுட்பங்களும் கொண்டு ஐபோன் 7-இல் கொண்டு முழுமையான அதிகாரப் பூர்வமான நீர்புகா போன்களை வரவிருக்கும் அனைத்து சாதனங்களிலும் அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கலாம். தற்போது அதை பற்றிய முயற்சியிலும் ஆராயிச்சியையும் மேற்கொண்டு வருகிறது. .எனவே வரும்காலத்தில் ஐபோன் பயனர்கள் நீந்திக் கொண்டோ மழையில் நனைந்து கொண்டோ பேச தயாராகலாம்!
Comments are closed.