தள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :

43

ஆஸ்திரேலியாவின் அறிமுகமாகியுள்ள  முதல் தீயணைக்கும் ரோபோட்டுகளான  TAF 20 புல்டோசர்களை கொண்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து வரும் புகை மற்றும் நெருப்பினை மனித உயிர்களுக்கு எந்தவித ஆபத்துமின்றி   பாதுகாப்பாக  அணைக்கும்படி   செய்யப்பட்டுள்ளது.

robot
நெருப்பிற்கு எதிராக சண்டையிடும் இந்த ரோபோவின் உதவி கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் புகையை பல தூரங்களிலிருந்தும்  அப்புறப்படுத்தலாம்.மேலும் நீரை 90மீட்டர்  தொலைவிற்கு அப்பாலிருந்தும் பாய்ச்சலாம்.இந்த TAF 20 புல்டோசர் இல் உள்ள பிளேடுகளைக்  கொண்டு அதிகளவு புகையையும் வெகு விரைவில் அப்புறப்படுத்தக் கூடியது.  மேலும் ஆபத்தான சூழ்நிலைகளில்  500 மீட்டர்  தொலைவிலிருந்து நீரை பாய்ச்சக் கூடியது. கூடவே அருகில் மனிதர்கள் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு  நெருப்பு பற்றிய சமயத்தில்  இந்த ரோபோவினை மட்டுமே செலுத்தி  ஆபரேட் செய்ய  முடியும்.அதன் விளைவாக  காப்பாற்ற  செல்லும் மனிதர்களுக்கு எந்த வித பாதிப்புமின்றி   பாதுகாக்கக் கூடியது. இந்த கருவியின் விலை $ 310,000  . இதனை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர்.இதற்கு முன்னரே ஜெர்மனி மற்றும் மெக்சிகோவில் பயன்படுத்தியுள்ளனர்.

robot3

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் இதுவே முதல் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட தீயணைக்கும் இயந்திரமாகும்.  இந்த கருவியைக் கொண்டு  பெரிய போரின் போதோ அல்லது இக்காடான ஆபத்தான தீ விபத்துகளின் போதோ மனிதர்கள் அருகே சென்று காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளிலும் கூட இந்த இயந்திரத்தின் உதவி கொண்டு எளிதில் காப்பாற்றலாம் கூடவே  பாதைகளில் இருக்கும் தடைகளையும் அப்புறப்படுத்தக் கூடியது . விபத்துகளின் போது காப்பாற்ற செல்லும் வீரர்களுக்கு எந்தவித இடர்பாடுமின்றி   காப்பாற்ற  கூடிய இந்த இயந்திரம் விரைவில் அனைத்து நாட்டினருக்கும் வழங்கப்பட்டால்  ஆபத்து காலங்களில்  மக்களுக்கு  பேருதவியாக இருக்கும்.

You might also like

Comments are closed.