பத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட் போன்கள் :

36

ஸ்மார்ட் போன்  வாடிகையாளர்கள் அனைவரையும்  வியப்பில் ஆழ்த்த வருகிறது  பத்து நாட்கள் வரை நீடித்து  நிற்கும் பேட்டரி மின் சக்தி கொண்ட ஆக்கிடெல் ஸ்மார்ட் போன்கள். வழக்கமாக ஸ்மார்ட் போன்கள் என்பவை எப்போதுமே  வாடிக்கையாளரை பொறுத்தவரையில் என்னதான் பல பல புதிய  பயன்பாடுகள்  என வந்து மக்களை வியப்பில் ஆழ்த்தினாலும் அவையனைத்தையும் எந்த வேளையிலும் நுகர பேட்டரி சக்திகள் என்பது அவசியமே! பேட்டரி சக்தியை பொருத்தவரையில் பயனர்கள் எப்போதும் ஒரு கையடக்க சார்ஜர்களையோ  அல்லது  எங்கேயும் சுமந்து செல்லக் கூடிய சேமிப்பு கலன்களையோதான் அணுகுவார்கள். அதுமட்டுமில்லாமல்  ஸ்மார்ட் போன்கள்  என்றாலே மக்கள்  குறைவான பேட்டரி சக்தி காரணமாக வாங்க மறுப்பதுன்டு.  சிலர் இரண்டு மொபைல் சாதனங்களை வாங்கி வைத்திருப்பதும் உண்டு. தற்போது இந்த ஆக்கிடெல் ஸ்மார்ட் போன்களைக்  கொண்டு பயனர்கள் 10,000Mah பேட்டரி சக்திகளைப் பத்து அல்லது 15 நாட்கள்  வரை நீடித்திருக்கும்  வசதியைப் பெறலாம்.

ஆக்கிடெலின்  உதவியுடன் நாம் ஒரு சுற்றுலாவிற்கு செல்லும்போதோ அல்லது நெடுநாள் பயணங்களின் போதோ சார்ஜ் ஏற்றிக் கொள்வதைப்  பற்றி யோசிக்காமல்  விருப்பட்ட அளவு புகைப்படங்களை எடுத்து மகிழலாம். மற்றும் விருப்பட்ட படங்களையும் இசையையும் கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம்.ஆகையால்  அடிக்கடி சார்ஜ் இல்லாததைப் பற்றிய ஒரு  பதட்டமின்றி  செயல்படலாம்.   ஆக்கிடெலின்  மூலம் ஸ்மார்ட் போனை இதற்கு முன் வாங்கி உபயோகிக்காதவர்களும்  வாங்க வாய்ப்புகள் உள்ளன.ஏறக்குறைய  வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றோர்களுக்கு  இது பயனுள்ளதாகவே அமையும்.இந்த மொபைல்  சாதனத்தின் முன் உத்தரவுகளை $240க்கு பெறலாம். மேலும் ஜனவரி 21லிருந்து  ஆக்கிடெல் ஸ்மார்ட் போனை சந்தையில் காணலாம்.

You might also like