780 total views
யூ-டியூப் வெளியான பத்து வருடங்களில் நாம் பல வீடியோக்களை கண்டு ரசித்திருந்தோம் . தற்போது அதில் புதிதாக கூடவே மெய்நிகர் வீடியோக்களை நமக்கு தர உள்ளது.இதற்கு அன்ராய்டு போனும் ஒரு ஒரு கார்ட் போர்ட் சாதனமுமே போதுமானதே ! யு-டியூபில் வாட்ச் பேஜ் மெனுவிற்கு சென்று கார்ட் போர்ட் பட்டனை அழுத்தினால் போதுமானது .கூடவே உங்கள் வலப் பக்கத்தில் ஒரு இசை நூலகத்தையும் காணலாம்.
இதனால் கார்ட்போர்டை வைத்திருப்பவர்கள் நேரடியாக யூ-டியூபில் வீடியோக்களை அப்லோட் செய்யலாம்.மேலும் பயனர்கள் வீடியோக்களை பரந்த நூலகம் கொண்ட ஒரு இசை நூலகத்தில் VR நுட்பத்தைக் காணலாம். இந்த யூ -டியூப் வீடியோக்கள் பார்வையாளருக்கு ஒரு IMAX தியேட்டரின் திரையில் பார்க்கும் காட்சிகளை போலவே உண்மை நுட்பத்தை தழுவி புதிய அனுபவத்தை ரசிகர்களிடையே கொண்டு வரும்.யூ-டியூபை பொறுத்த வரையில் VR நுட்பத்தை தத்தெடுத்தது புதிதான செயல் ஒன்றுமில்லை. ஏனெனில் 2009 இல் 3 -D வீடியோக்களை வாங்கி அதை எப்படி பயனர்கள் மத்தியில் வெற்றிகரமாக மாற்றியதோ அதே போலவே இதனையும் பிரபலபடுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளது .
இந்த கார்ட்போர்டுடன் கூடிய யூ -டியுப் வீடியோக்கள் தற்காலிகமாக ஆன்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஆதரவளிக்கும். ஐபோன்களில் அதன் பதிப்புகள் கூடிய விரைவில் வரும் என எதிர்பாரக்கபடுகிறது.
Comments are closed.