ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் !

884

 1,065 total views

நீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா? அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும் , வீட்டு முகவரியையும் கூட ஞாபக வைத்து கொள்வதில்லை என்று கூறும் இந்த நிலைமையையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். இதனை பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சி செய்துள்ளது .
கேஸ்பர்ஸ்கை ஆராய்ச்சி கூடம் பதினாறு வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள 1000 நபர்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி 91% மக்கள் தங்கள் மூளைக்கு பதிலாக ஸ்மார்ட் போனையே நம்பியிருந்தது தெரிய வந்தது. மனிதர்கள் கட்டாயமாக அறிய வேண்டிய 50 சதவிகித தகவல்களை ஸ்மார்ட் போன்களே தெரிந்து வைத்திருக்கிறது.

Depression-and-memory-loss-290x213இந்த செய்தியால் நாம் சிறு சிறு நினைவூட்டலுக்கு கூட ஸ்மார்ட் போன்களை நம்பியிருப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்தது ஒரு நற்செய்தியே என்று சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாக்கட் கூறினார்.
சில சில விசயங்களுக்கு கூட ஸ்மார்ட் போன்கள் நம்மிடையே நிறைந்திருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் குறுகிய கால நினைவுகளில் செயலிழக்கின்றன .இதனால் நீங்கள் ஒரு வேலை உங்கள் ஸ்மார்ட் போனை இழந்தால் அது உங்கள் மூளையின் ஒரு பகுதியை இழந்ததற்கு சமமாகும். இதனால் நம் நண்பரின் மொபைல் என்னை மட்டுமல்லாது பல நினைவூட்டக்கூடிய தருனங்களையும் , புகைப்படங்களையும் நாட்களையும் தான் இழக்க வேண்டியிருக்கும் .

இதில் முக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது நம் மொபைல் சாதனத்தில் குறித்து வைக்கும்போது தானாகவே நம் மூளை அந்த விஷயத்தை மனதில் பதிய வைக்க மறுக்கிறது. கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தனர்.

இந்த பிரச்னைக்கு எந்தெந்த விசயங்களுக்கு மக்கள் மூளையை உபயோகபடுத்தாமல் தங்கள் ஸ்மார்ட் போன் சாதனங்களை உபயோகபடுத்துகிறார்களோ அந்த அனைத்து தகவல்களையும் ஒரு மென்பொருளின் உதவி கொண்டு சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுகள் காணலாம் என சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாகட் தீர்வு கூறியுள்ளார் . கூடுதலாக இந்தமாதியான மென்பொருள்களும் கை கொடுக்கவில்லை என்றால் உங்கள் அனைத்து தேவைப்படும் தகவல்களையும் ஒரு சிறு மெமரி கார்டில் சேமித்து வைப்பது சிறந்ததே !   மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு  போனில் மட்டுமல்லாமல்  மனதிலும்  நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும்.  ஏனெனில் மனித  மூளை   மட்டுமே எப்போதும்  யாராலும்  திருட முடியாத ஒன்று !

You might also like

Comments are closed.